உலகம்
பாலஸ்தீன இளைஞர்களை வாகனத்தின் முன் கட்டி வைத்து ஊர்வலம் : வெளிவந்த இஸ்ரேல் ராணுவத்தின் கொடுமை !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியுள்ளது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், 90 சதவீத காசாவின் பரப்பு இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தாக்குதல் இதுவரை 38 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் பாலஸ்தீன இளைஞர்களை வாகனத்தின் முன் கட்டிச்சென்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியான செய்தியில், மேற்கு கரை பகுதியில், சில பாலஸ்தீனியர்கள் மெது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
பின்னர் அதில் இருவரை வற்புறுத்தி, ஜீப்பின் முன்புறம் ஏற்றிக் கொண்டு மிகவும் வேகமாக, கிராமப்புற சாலைகளில், இஸ்ரேலிய ராணுவத்தினர் ஓட்டிச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட இளைஞர்களே பகிரங்கமாக இதுகுறித்து குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read
-
“திறக்கப்படாத மேட்டூர் அணையால் வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்!” : தவெக அரசுக்கு திமுக கண்டனம்!
-
“டெல்லி சென்று கழக அரசின் சாதனைகளுக்கு Sticker ஒட்டியிருக்கிறது SofaModel அரசு” : உதயநிதி ஸ்டாலின் பளார்!
-
கர்நாடகம் சென்ற விஜய் - காவிரி நீரை கொண்டு வருவாரா? : தி.மு.க கேள்வி!
-
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக விஜய் எடுக்கும் நடவடிக்கையின் லட்சணம் : உண்மையை தோலுரித்த முரசொலி!
-
ஸ்ரீவைகுண்டம் விவகாரம் - யார் அந்த மேலிடம்? : முதல்வர் விஜய்க்கு, உதயநிதி ஸ்டாலின் கேள்வி!