உலகம்
ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு மீண்டும் அனுமதி மறுப்பு : அமெரிகாவின் முடிவுக்கு காரணம் என்ன ?
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது.
இந்த போரில் சில நாட்களுக்கு முன்னர் பல மாதங்கள் தொடர் முற்றுகைக்கு பின்னர் உக்ரைனின் அவ்டிவ்கா நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. அதோடு உக்ரைனின் முக்கிய நகரமான கார்கிவின் பல பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு மேலும் கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடென் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியான செய்திகளில் உக்ரைனுக்கு குறைந்த இலக்குகளை தாக்கும் ஆயுதங்களை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயுதங்களை பயன்படுத்த கார்கிவ் பிராந்தியத்திற்கு அருகில் மட்டுமே இந்த தாக்குதலை முன்னெடுக்க மட்டுமே உக்ரைனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் உள்பகுதிகளில் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினால் இந்த போர் அமெரிக்கா - ரஷ்யா இடையேயானதாக மாறும் என அஞ்சப்படுவதால் அமெரிக்கா தற்போதுவரை குறுகிய இலக்குகளை தாக்கும் ஆயுதங்களை மட்டுமே உக்ரைனுக்கு அனுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
காவிரி விவகாரம் ; பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒருபோதும்... : தவெக அரசுக்கு வலியுறுத்திய ஓ.பன்னீர்செல்வம்!
-
விமர்சனத்தைச் சகித்துக் கொள்வார்களா? ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறதா?: தவெக அரசுக்கு இந்து ராம் கேள்வி!
-
‘ஜனநாயகன்’ ரிலீஸ் புரமோஷனுக்காகத் தான் கர்நாடகா செல்லவே திட்டமிட்டாரா விஜய்? : முரசொலி தலையங்கம்!
-
“எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது!” : சட்டப்பேரவையில் மரிய வில்சன் சர்ச்சை பேச்சு!
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!