உலகம்
ரஷ்ய படைகள் மீது உக்ரைன் படைகள் திடீர் தாக்குதல் : ஒரே நாளில் உயிரிழந்த 1,740 ராணுவ வீரர்கள் !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய படைகள் மீது உக்ரைன் படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் ஒரே நாளில் 1,740 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைனுக்குள் நுழைந்த தாக்குதல் நடத்திவந்த ரஷ்ய படைப்பிரிவு ஒன்றில் மீது உக்ரைன் படைகள் ஒன்றுதிரண்டு ஒரு பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 42 ரஷ்ய கவச வாகனங்கள் அளிக்கப்பட்டு ஏராளமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகளுக்கு உதவ துணைப் படைகள் வந்த நிலையில், அதன் மேலும் உக்ரைன் கடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரே நாளில் 1,740 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவே ரஷ்யாவுக்கு ஒரே நாளில் நடந்த பேரிழப்பாக அறியப்படுகிறது. எனினும் இது குறித்து ரஷ்யா தரப்பில் எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!
-
கோவில் குடமுழுக்கில் பிரச்சனை.. தட்டிக்கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகி -கொந்தளிக்கும் மக்கள்!
-
தவெக அரசின் அட்டூழியம்.. புகாரை அடுக்கிய திமுக.. அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை! - முழு பட்டியல் இதோ!
-
FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!
-
"ஆள் பிடிப்பதற்காகவே த.வெ.க ஆட்சி நடக்கிறது!" - ஆளுநரிடம் ஆர்.எஸ்.பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!