உலகம்

அடிடாஸ் ஷூ அணிந்ததால் சர்ச்சை : நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு... மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர் !

பிரிட்டனின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.

இதன் காரணமாக அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர். இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகினார்.

இவர் பதவியேற்றதும் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை பெரும் புயலை கிளப்பியது. அதைத் தொடர்ந்து பதவியேற்ற 45 நாட்களில் பிரிட்டன் பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக அடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், ஷூ ஒன்றியை அணிந்து தற்போது ரிஷிசுனக் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரிஷி சுனக் கருப்பு நிற சாக்ஸ் அணிந்து அத்துடன் அடிடாஸ் சம்பா ஷூவும் அணிந்திருந்தார். ஆனால், இது இணையவாசிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பிரிட்டன் வரலாற்றின் பணக்கார பிரதமரான ரிஷி சுனக் சாதாரண சம்பா ஷூவை அணிந்து தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதாக விமர்சனம் எழுந்தது.

மேலும், சம்பா ஷூவின் லுக்கையே ரிஷி சுனக் கெடுத்துவிட்டார் என்றும் விமர்சனங்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து தனது செயலுக்கு ரிஷி சுனக் மன்னிப்பு கோரியுள்ளார். "சம்பா ரசிகர்களிடம் நான் முழுமனதாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் சம்பா உள்பட அடிடாஸ் ஷூக்களை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன்.எனது சகோதரர் கிறிஸ்துமஸ் பரிசாக சம்பா ஷூவை வழங்கிய பின்னர், நான் தொடர்ந்து அடிடாஸ் ஷூக்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்"என்று கூறியுள்ளார்.

Also Read: உ.பி : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் நண்பர்... அம்மாவின் சம்மதத்தோடு நடந்த கொடூரம் !