உலகம்
"ரஷ்ய முன்னேற்றத்தை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளோம்" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெருமிதம் !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது.
இந்த போரில் சில நாட்களுக்கு முன்னர் பல மாதங்கள் தொடர் முற்றுகைக்கு பின்னர் உக்ரைனின் அவ்டிவ்கா நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. இதன் காரணமாக ரஷ்யா மீதான தாக்குதலை உக்ரைன் அதிகரித்து வருகிறது. ஆனால் ஆளில்லா ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. ஆளு கருங்கடலில் ரஷ்யாவின் பல்வேறு போர் கப்பல்களை உக்ரைன் ட்ரோன் தாக்குதல் மூலம் மூழ்கடித்தது.
இந்த நிலையில், ரஷ்ய முன்னேற்றம் உக்ரைனால் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டுள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " கடந்த 3 மாதங்களை விட இப்போது நிலைமை மிகவும் சிறப்பாக உள்ளது.ரஷ்யா உக்ரைனின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஆனால். தற்போது ரஷ்ய முன்னேற்றம் உக்ரைனால் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனின் திறன் தற்போது அதிகரித்துள்ளது. 1,000 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமான கட்டுமானத்தை உருவாக்கும் பணியில் உக்ரைன் உள்ளது. இந்த தற்காப்புக் கட்டுமானங்களுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அதனை உக்ரைன் தடுத்து நிறுத்தும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
பல்லிளிக்கும் தவெக அரசு.. அமைச்சர் நிர்மல்குமார் நிகழ்வில் மின் தடை.. அமைச்சர், மின்துறை இரட்டை விளக்கம்!
-
“நீங்கள் Failed ஹீரோ, Failed முதலமைச்சர்” : விஜய் பேச்சுக்கு தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் பதிலடி!
-
ஆய்வு, ஆராய்ச்சி என்ற பெயரால் படுகுழிக்கு பல்லாக்கு தூக்குவதா? : முரசொலி தலையங்கம் சாடல்!
-
“பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்... தரம் தாழ்ந்து பேசுவதா?”: சிஎம் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஜெம் வீரமணி வழக்கை முடிவுக்கு கொண்டுவர வாதிட்டது த.வெ.க அரசுதான்!” : தி.மு.க எம்.பி பி.வில்சன் தகவல்!