உலகம்
"ரஷ்யாவால் ஆபத்து, போருக்கு தயாராக வேண்டும்" - ஸ்விட்சர்லாந்து பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தொடவுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது. மேலும், மேற்கத்திய நிறுவனங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அதே போல ஐரோப்பிய நாடுகள் பலவும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை அனுப்பி வருகின்றனர். இதன் காரணமாக அந்த நாடுகள் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்யா உண்மையில் அச்சுறுத்தலான நாடுதான் என்றும், இதனால் நாம் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் ஸ்விட்சர்லாந்து கூறியுள்ளது.
மியூனிக்கில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட சுவிஸ் மாகாண பாதுகாப்புச் செயலாளர் மார்கஸ் மேட், "ரஷ்யாவால் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதனால் போருக்கு நாம் தயாராக இருக்கவேண்டும். கூட்டாளர்களுடனான ஒத்துழைப்பை தீவிரப்படுத்ததி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். ஐரோப்பாவில் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதற்கு காரணம் உள்ளது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
”இது நாங்கள் உருவாக்கிய கூட்டணி” : எடப்பாடி பழனிசாமிக்கு தொல்.திருமாவளவன் பதிலடி!
-
”ஓரணியில் தமிழ்நாடு” கைகோக்கும் குடும்பங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
ஆகஸ்ட் மாதத்தில் ‘முதலமைச்சர் கோப்பை - 2025’ : முன்பதிவை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
25 மாநகராட்சிகள் 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் அடிப்படை பணிகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!