உலகம்

"ரஷ்யா போர் தொடுத்தால் அதனை எதிர்கொள்ள தயார்" - போலந்து நாட்டின் அறிவிப்பால் பரபரப்பு!

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தொடவுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது. மேலும், மேற்கத்திய நிறுவனங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Mateusz Morawiecki

அதே போல ஐரோப்பிய நாடுகள் பலவும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை அனுப்பி வருகின்றனர். அதில் முதன்மையான நாடாக போலந்து இருக்கிறது. உக்ரைனுக்கு போரின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை அதிகளவிலான ஆயுதங்களை அனுப்பிய நாடாக போலந்து இருக்கிறது. உக்ரைனை தொடர்ந்து போலந்து மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக பல்வேறு தருணங்களில் கூறப்பட்டது.

இந்த நிலையில், ரஷ்யா தங்கள் மீது போர் தொடுத்தால் போரை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக போலந்து அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய போலந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மத்தேயூஸ் மோராவியஸ்கி (Mateusz Morawiecki), ”ரஷ்யா எங்கள் மீது போர் தொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஒருவேளை போர் தொடங்கினால், அதனை எதிர்கொள்ள ராணுவம் தயாராக உள்ளது.

நடைபெறும் போர் எந்த அளவிற்கு மோசமானதாக இருக்கும் என்று கணித்து வரப்பட்டு வருகிறது. போலந்தில் உள்ள ஆயுதங்களை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு அமைச்சராக உள்ளதால் ஒவ்வொரு சொல்லையும் கவனித்தே பேசுகிறேன்" என்று கூறியுள்ளார்.