உலகம்
"ஹமாஸைவிட இஸ்ரேலைப் பார்த்துதான் அஞ்சுகிறோம்" - இஸ்ரேலில் பிணையகைதிகளின் வீடியோவால் சர்ச்சை !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 26 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பிடம் சிக்கியிருந்த பணயகைதிகளே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஹமாஸைவிட இஸ்ரேலைப் பார்த்துதான் அஞ்சுகிறோம் என ஹமாஸ் அமைப்பிடம் உள்ள இஸ்ரேல் பிணையகைதிகள் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் பிணைக்கைதிகள் டேனியல்லா கில்போவா, கரினா அரிவ், டோரோன் ஸ்டெய்ன்பிரீச் ஆகிய என மூன்று பேர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் இருவர் இஸ்ரேல் ராணுவத்தில் இருந்து பிணைக்கைதிகளாக பீடிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
அந்த வீடியோவில், 107 நாள்களாக பிணைக்கைதிகளாக இருந்தும் இஸ்ரேல் அரசு பிணைக்கைதிகளை மீட்கத் தகுந்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் , இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால், துப்பாக்கிச்சூடுகள் மற்றும் குண்டு வெடிப்புகளுக்கு மத்தியில் உயிருக்குப்போராடி வருகிறோம் என்றும், ஹமாஸை விட என் நாட்டைப் பார்த்தால்தான் எனக்கு இப்போது பயமாக உள்ளது என்றும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!