உலகம்

அடுத்தடுத்து பணிநீக்கம் : லாபத்தை அதிகரிக்க மேலும் 100 பணியாளர்களை LAYOFF செய்யும் Google !

ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.கொரோனா காலத்தில் ஐ.டி நிறுவனங்கள் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டது.

இதனால் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வேலையிலிருந்து வெளியேற்றியது.சில சிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்க வலியுறுத்தியது. கொரோனா பேரழிவைத் தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஐ.டி நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டது. இதன் தாக்கம் ஐ.டி நிறுவனங்கள் மட்டுமல்லாது முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களாகக் கருதப்படும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களையும் பாதித்தது.

அதன் வெளிப்பாடாக ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் முடிவுக்கு தள்ளியுள்ளது. ஃபேஸ்புக் தங்களது ஊழியர்களை 11000 பேரை நீக்குவதாக அறிவித்தது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கூகுள் நிறுவனமும் 12,000 பேரை பணிநீக்கம் செய்தது.

அடுத்ததாக கூகுள் நிறுவனத்தின் விளம்பர விநியோகப் பிரிவில் செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதனால் அதில் பணிபுரியும் சுமார் 30,000 பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மேலும் 100 பணியாளர்ளை கூகிள் நிறுவனம் பணிநீக்கம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 2023-ன் இரண்டாம் பாதியில் மேற்கொள்ளப்பட்ட பணிநீக்கங்களுக்குப் பிறகு, சில அணிகள் தொடர்ந்து இது போன்ற மாற்றங்களைச் செய்து வருகின்றன என கூகிள் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இந்த முறை, டிஜிட்டல் அசிஸ்டன்ட், ஹார்டுவேர் மற்றும் என்ஜினீயரிங் டீம்களில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நிறுவனங்கள் தங்கள் லாபத்துக்காக இப்படி ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "காதலால் நடந்தது, காமத்தால் அல்ல"- சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாக்பூர் நீதிபதி கருத்தால் சர்ச்சை!