இந்தியா

"காதலால் நடந்தது, காமத்தால் அல்ல"- சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாக்பூர் நீதிபதி கருத்தால் சர்ச்சை!

"காதலால் நடந்தது, காமத்தால் அல்ல"- சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாக்பூர் நீதிபதி கருத்தால் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் நிதின் (வயது26). இவரும் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். தங்கள் காதலை தங்கள் பெற்றோர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனக் கருதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் சார்பில் காவல்துறையில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த போலிஸார் சிறுமியையும், நிதினையும் கண்டுபிடித்தனர். பின்னர் மைனர் பெண்ணை அழைத்துசெய்த நிதினை கைது செய்தனர்.

பின்னர் போலிஸார் நடத்திய விசாரணையில் தான் விருப்பப்பட்டுத்தான் நிதினுடன் சென்றதாக அந்த சிறுமி குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர்களுக்கு இடையே பாலியல் உறவு ஏற்பட்டதாகவும் விசாணையில் தெரியவந்தது. இதனிடையே கைது செய்யப்பட்ட நிதி ஜாமின் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

"காதலால் நடந்தது, காமத்தால் அல்ல"- சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாக்பூர் நீதிபதி கருத்தால் சர்ச்சை!

மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோஷி, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 13 வயதாகிறது என்பதால் அவரது ஒப்புதலை ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றம் சாட்டப்பட்ட நபருடன் காதலில் இருந்ததை பாதிக்கப்பட்ட சிறுமி ஒப்புக்கொண்டுள்ளார். "

மைனர் பெண் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் அவர் நிதினுடன் பல இடங்களில் தங்கி இருந்ததாக தெரிவித்துள்ளார். கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்றதாக எந்த இடத்திலும் சிறுமி புகார் சொல்லவில்லை. காதல் விவகாரத்தால் இது நடந்திருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. காமத்தால் நடந்ததாக தெரியவில்லை'' என்று கூறி நிதினுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories