உலகம்
லெபனானுக்கு பரவிய போர் : இஸ்ரேல் தாக்குதலில் 5 பேர் பலி.. பதிலடி கொடுக்கப்படும் என ஹஸ்புல்லா எச்சரிக்கை !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 22 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த போர் தற்போது பாலஸ்தீனத்தை தாண்டி லெபனானுக்கும் பரவியுள்ளது. லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் ஹமாஸ் துணைத் தலைவா் சலே அல்-அரூரியயை இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் மூலம் கொலை செய்தது. இதற்கு லெபனானின் சக்திவாய்ந்த அமைப்பான ஹஸ்புல்லா கடும் கண்டனம் தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் லெபானானில் நடத்திய சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலில் 5 ஹஸ்புல்லா வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித்தாக்குதலில் ஒரு வீடு தரைமட்டமானதாகவும், அருகிலுள்ள வீடுகள் சேதமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என ஹஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
Also Read
-
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!
-
“சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல!” : தி.மு.க கொறடா எ.வ.வேலு கண்டனம்!
-
தனியார் பல்கலை. திருத்த மசோதா நிறைவேற்றம்.. சமூகநீதியை சீர்குலைக்கும் தவெக அரசு - கோவி. செழியன் கண்டனம்!
-
அருவெறுப்பான உரை... : முதலமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க!
-
"இன்னும் எத்தனை உயிர்கள்?" - த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி ஆவேச கேள்வி!