உலகம்

திடீரென்று மொத்தமாக முடங்கிய ட்விட்டர் X நிறுவனம்... திகைத்த பயனாளர்கள்... காரணம் என்ன ?

தற்போதுள்ள இணைய உலகில் அனைத்தும் இணையத்தை சார்ந்தே இருக்கிறது. ஒரு பக்கம் சமூக ஊடகங்கள் பலரும் வாழ்க்கை அளிக்குமாறு இருந்தாலும், சிலருக்கு பிரச்னை ஏற்படுகிறது. குறிப்பாக முகநூல், வாட்சப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக நாம் நமது கருத்துகளை பிறருக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கிறது.

அந்த வகையில் சமூக ஊடகங்களில் முக்கிய பங்கு ஆற்றுவதில் ட்விட்டர் முதன்மையாக விளங்குகிறது. ஆனால் இந்த நிறுவனம் கடந்த ஆண்டு எலன் மஸ்க் கைப்பற்றியதில் இருந்தே பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வருகிறது. அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றி பல சிக்கல்களை ஏற்படுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தில் சி.இ.ஓ-வாக தான் வளர்க்கும் நாய் ஒன்றை அறிவித்தார்.

மேலும் ட்விட்டர் என்ற பெயரை X என்று பெயர் மாற்றியும் அறிவிப்பை வெளியிட்டார். இப்படியாக தொடர்ந்து அவரது கைக்கு இந்த நிறுவனம் சென்றதில் இருந்தே பல நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இன்று காலையில் இருந்தே சில மணி நேரமாக ட்விட்டர் சமூக வலைதளம் செயல்படாமல் முடங்கி இருந்துள்ளது. இதனால் பயனர்கள் பெரும் அவதிக்கு உள்ளானர்.

தொடர்ந்து இதற்கு பயனர்கள், தங்களது மற்ற வலைதள பக்கங்களில் இதுகுறித்து மீம்கள் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வந்தனர். இதையடுத்து சில நேரம் கழித்து மீண்டும் வலைதளம் செயல்பட தொடங்கியது. இதைத்தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்கள் கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் மீம்களை உருவாக்கி ட்விட்டர் பக்கத்திலேயே ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அதோடு #TwitterDown என்ற ஹாஷ்டாக்கையும் இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதுகுறித்து வெளியான தகவலின்படி ட்விட்டர் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் பக்கம் இயங்கவில்லை. எனினும் இதுகுறித்து X வலைதளம் இதுகுறித்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

Also Read: கணிப்பை விட பல மடங்கு அதிகம் பெய்த கனமழை : இந்திய வானிலை மையத்தின் தவறு என்ன ? முழு விவரம் உள்ளே !