உலகம்
க்ரீமியா பகுதியில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் : வானிலேயே சுட்டு வீழ்த்திய ரஷ்ய ஏவுகணை அமைப்பு !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. எனினும் கடந்த 2 மாதமாக இரு பக்கத்தில் இருந்தும் பெரிய அளவில் தாக்குதல்கள் நடக்காத நிலையில், இந்த போர் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ரஷ்யா கட்டுப்பாட்டில் இருக்கும் க்ரீமியா பகுதியில் உக்ரைன் ராணுவம் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது மீண்டும் அங்கு பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு உக்ரைன் சார்பில் க்ரீமியா பகுதியை நோக்கி ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும் இந்த தாக்குதலை ரஷ்யாவின் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் தடுத்து நிறுத்தின என்றும், இதில் 16 ட்ரோன்கள் வானிலேயே அழிக்கப்பட்டன என்றும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த அவ்டிவ்கா நகரை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கிழக்கு உக்ரைனின் ஏராளமான நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!