உலகம்
திருமணம் நிச்சயம் நடந்த சில நாட்களில் Instagram பிரபலம் திடீர் மரணம் : நடந்தது என்ன?
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ருடால்ப் துவார்த் ரிபெய்ரோ டாஸ் சான்டோஸ். மருத்துவரான இவர் ஜிம் பயிற்சியாளராகவும் இருந்து வந்தார். இவர் உடற்பயிற்சி செய்தும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிரபலமானர்.
இதைப்பார்த்த பலரும் இன்ஸ்டாகிராம் வழியே ஆலோசனை கேட்டு வந்தனர். மேலும் மருத்துவராகவும் மருத்துவம் சார்ந்த வீடியோக்களையும் வெளியிட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
அவர் ஸ்டிராய்டு வகை மருந்தை உட்கொண்டதால் அவரது உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் இதை அவர் பணியாற்றி வந்த மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த டாஸ் சான்டோஸ் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்குக் காரணம் மாரடைப்பு என மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இவருக்கு சாஞ்செஸ் என்ற பெண்ணுடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டது.
தனது வருங்கால கணவர் உயிரிழந்ததை அடுத்து கிடார் வாசித்து, பாடல் பாடி அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அவருக்கு சமூகவலைதளத்தில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!