உலகம்
ஐ.நா-வில் நிறைவேறியது இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் : தீர்மானத்தை ஆதரித்த இந்தியா : முழு விவரம் என்ன ?
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கிழக்கு ஜெருசலேம், ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவின் கோலான் பகுதிகள் ஆகிய இடங்களில் இஸ்ரேல் சார்பில் நடத்தப்பட்ட சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளைக் கண்டிக்கும் விதமாக ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 145 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், ஹங்கேரி, இஸ்ரேல், மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா, நவுரு, அமெரிக்கா ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. மேலும், 18 வாக்கெடுப்பில் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதன் காரணமாக இந்த தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!