உலகம்
11 வயது சிறுவனை கொடூரமாக கடித்த தெரு நாய்.. 3 மணி நேரம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை.. பிறகு நடந்தது என்ன ?
தெரு நாய் தொல்லை இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்திலும் கூட இருக்கிறது. இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கு உள்ள வித்தியாசம் என்னவென்றால் இங்கிலாந்தில் நாய்கள் வளர்ப்பு பிராணியாக வளர்ப்பவர்கள் அனுமதி பெற வேண்டும். யார் நாய் என்பதை கண்டுபிடித்துவிட முடியும்.
அண்மையில் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் மிகப்பெரிய உணவு பொருள் விற்பனை கார்ப்பரேட் நிறுவங்களில் ஒன்றான வாக் பக்கிரியின் நிர்வாக இயக்குநரான பராக் தேசாய், தெரு நாய்களின் தாக்குதலால் தலையில் பலத்த காயம் அடைந்து அக்டோபர் 22ம் தேதி உயிரிழந்தார்.
இங்கிலாந்து நாட்டின் கிரேட்டர் மான்செஸ்டரின் ஓல்ட்ஹாம் என்ற நகரில் மொஹித் கர்தாஸி என்ற 11 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்த சூழலில் சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த XL Bully என்ற வகை நாய் ஒன்று சிறுவனை பார்த்து குரைத்துள்ளது. பின்னர் சிறுவனை ஓடி துரத்தி பாய்ந்து கடித்து குதறியது.
இந்த நாய் கடித்ததில் சிறுவன் அலறி துடிக்கவே, அவரது சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அந்த நாயை துரத்தினர். இதைத்தொடர்ந்து நாய் கடிதத்தில் படுகாயமடைந்த சிறுவன் இறந்து விட்டதாக எண்ணிய அக்கம்பக்கத்தினர், உடனே இதுகுறித்து அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்தனர். இதனை கேட்டு பதறியடித்து ஓடி வந்த பெற்றோர், சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நாயை பிடித்து சென்றுள்ளனர். தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு பரிசோதனை செய்தபோது, சிறுவன் உயிரோடு இருந்தது தெரியவந்தது. பின்னர் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.
இதனிடையே ஆபத்தான முறையில் நாயை வளர்த்த குற்றத்துக்காக அதே பகுதியை சேர்ந்த 43 வயதான பவுலா ஜென்கின்ஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அதோடு அந்த நாய் தாக்கியதில் 31 வயது பெண்ணுக்கும் இலேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், நலமோடு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!