உலகம்
ஐ.நாவில் காசாவுக்கு உதவிகளை அனுப்பும் தீர்மானம் : VETO அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்த அமெரிக்கா !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த வாரம் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த வாரம் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலின் இந்த தாக்குதளுக்கு ஏராளமான உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்த போரினை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் குரல்கொடுத்து வந்துள்ளன. இந்த நிலையில், இஸ்ரேல் -ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை அனுப்ப ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பிரேசில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது.
இந்த தீர்மானத்துக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள 15 உறுப்பு நாடுகளில் 12 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதன் காரணமாக இந்த தீர்மானம் பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தை ரத்து செய்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !