உலகம்
அமெரிக்க அதிபருக்கு சிக்கலை ஏற்படுத்திய வளர்ப்பு நாய்.. 11-வது முறையாக நடந்த சம்பவத்தால் சர்ச்சை !
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.
தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.
ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வருகிறது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இது தவறு வயது முதிர்வு காரணமாக பைடன் அடிக்கடி தடுமாறி விழுவது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அவரின் வளர்ப்பு நாய் காரணமாக அவர் சர்ச்சையில் சிக்கிவருவது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோ பைடன் 'கமாண்டர்' என பெயரிடப்பட்ட வளர்ப்பு நாய் ஒன்றை வளர்ந்து வந்துள்ளார். இவர் அமெரிக்க அதிபரானதும், அந்த நாயும் இவரோடு வெள்ளை மாளிகையில் வசித்து வந்தது.
ஆனால், பல நேரங்களில் ஆக்ரோஷமாக மாறும் இந்த நாய் அதிபருக்கு பாதுகாப்பு அளித்துவந்த வீரர்களை கடிப்பது வழக்கமாக இருந்துள்ளது. இதற்கு முன்னர் பல்வேறு அதிகாரிகளை இந்த நாய் கடித்துள்ள செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் தற்போது மீண்டும், ஜோ பைடனின் வளர்ப்பு நாய் 11-வது முறையாக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதற்கு முன்னர் ஜோ பைடனின் மற்றொரு வளர்ப்பு நாயான 'மேஜர்' என்ற ஜெர்மன் ஷெப்பர்டு நாய் இதே போன்று அதிகாரிகளை கடித்து ஆக்ரோஷமாக நடந்துகொண்டதால் அந்த நாய் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!