உலகம்

டிரம்ப் இறந்துவிட்டார்.. அதிகாரபூர்வ பக்கத்தில் வந்த செய்தி.. ஆடிப்போன அமெரிக்கர்கள்.. நடந்தது என்ன ?

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வருகிறது. இதன் காரணமாக டிரம்ப்பின் செல்வாக்கு அமெரிக்காவின் அதிகரித்து வருகிறது. அதோடு அடுத்த தேர்தலிலும் தான் போட்டியிடப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் டிரம்ப் மகன் டொனால்ட் டிரம்ப் Jr-ன் அதிகாரபூர்வ X தளத்தில் "எனது தந்தை டொனால்ட் டிரம்ப் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். நான் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்" என காலை 8.25 மணியளவில் பதிவு ஒன்று வெளியானது.

இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சுமார் ஒரு மணி நேரம் அளவு அந்த பதிவு அவரின் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் Jr-ன்செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ சுரபியன், டொனால்ட் டிரம்ப் Jr-ன் கணக்கு ஹேக் செய்யப்பட்டு யாரோ அதில் இவ்வாறு பதிவிட்டுள்ளனர் என விளக்கமளித்தார். இந்த சம்பவம் சிறிது நேரத்துக்கு அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உதவி செய்த நாட்டையே துரோகி என விமர்சித்த உக்ரைன் அதிபர்.. ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அறிவித்த போலந்து !