உலகம்
68 போர் விமானங்கள், 10 போர்கப்பல்கள்.. அமெரிக்காவில் செயலுக்கு பதிலடியாக தைவானை முற்றுகையிட்ட சீனா !
இரண்டாம் உலகப் போரின்போது , சீனாவை ஆண்டு வந்த கோமிங்டாங் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதில் கோமிங்டாங் கட்சியை அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரித்த நிலையில், மக்கள் ஆதரவு காரணமாக அந்த போரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றது.
கம்யூனிஸ்டுகளின் இந்த வெற்றியைத் தொடர்ந்து கோமிங்டாங் கட்சியின் தலைவர் சியாங் காய்-ஷேக் தலைமையில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் சீனாவுக்கு அருகில் இருந்த தைவானுக்கு தப்பிச்சென்றனர். தொடர்ந்து நாங்கள்தான் உண்மையான சீனா என கோமிங்டாங் கட்சியினர் கூறிக்கொள்ள, சீனாவின் 90% நிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியும் நாங்களே உண்மையான சீனா என்று கூறியது.
ஆரம்பத்தில் உலகின் பெரும்பாலான நாடுகள் தைவானை உண்மையான சீனா என அங்கீகரித்த நிலையில், காலால் செல்ல செல்ல சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீனாவை அங்கீகரிக்க தொடங்கின. தற்போதைய நிலையில், தைவானை உலகின் 14 நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன. அமெரிக்கா கூட இன்னும் தைவானை அங்கீகரிக்கவில்லை.
இதனிடையே கடந்த ஆண்டு அமெரிக்காவின் மிக மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு சென்றார். அவர் வருகைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனாலும் அதை மீறி அவர் தைவான் சென்றார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த தைவானை சுற்றி ஏவுகணைகளை நிறுத்திய சீனா அந்த பகுதியில் போர் பயிற்சியிலும் ஈடுபட்டது. இது அந்த பிராந்தியத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதனால் அந்த பிராந்தியத்தில் கடந்த ஒரு வருடமாக அந்த பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கும் முன்னர் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள அதீநவீன இராணுவ உபகரணங்களை தைவானுக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தைவானை முற்றுகையிடும் விதமாக மொத்தமாக 68 போர் விமானங்கள் மற்றும் 10 கடற்படைக் கப்பல்களை சீனா அனுப்பி வைத்துள்ளது. இந்த படைகள் தைவானை முற்றுகையிட்டுள்ள நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சீனாவின் இந்த நடவடிக்கை ஆசியாவில் போரை தூண்டுமா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நெல்லையில் ரூ.30 கோடியில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு... என்னென்ன வசதிகள்? - விவரம்!
-
4.29 லட்சம் வீடுகள்.. 25.56 லட்சம் பேருக்கு பட்டாக்கள்.. ஏழை மக்களின் கனவை நனவாக்கிய திராவிட மாடல்!
-
“நிதிஷ் குமாரின் கதியைப் பார்த்தாவது திருந்த வேண்டும்...” - பழனிசாமிக்கு முரசொலி தலையங்கம் அறிவுரை!
-
“கழக வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த திருச்சி மாநாடு...” - வரலாற்று சுவடுகளோடு முதலமைச்சர் மடல்!
-
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! : தி.மு.க சார்பில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல்!