உலகம்
"வரலாறு உங்களை கனிவோடு மதிப்பிடாது" - பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை விமர்சித்து ராஜினாமா செய்த MP !
பிரிட்டனின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.இதன் காரணமாக அவர் பதவி விலகினார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர். இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகினார்.
இவர் பதவியேற்றதும் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை பெரும் புயலை கிளப்பியது. அதைத் தொடர்ந்து பதவியேற்ற 45 நாட்களில் பிரிட்டன் பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக அடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பிரிட்டனின் பிரதமராக கடந்த ஆண்டு பொறுப்பேற்றார்ர்.
இவர் பதவியேற்ற சூழல் கடும் நெருக்கடிக்குள்ளாக அமைந்துள்ள நிலையில், நெருக்கடியை சமாளிக்க பல அதிரடி நடவடிக்கைகளை ரிஷி சுனக் எடுத்தார்ர். எனினும் தொடர்ந்து பிரதமர்கள் அங்கு மாறிவரும் நிலையில் மக்களிடையே ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நம்பிக்கை இழந்து வருவதாக தொடர்ந்து அங்கு கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், ரிஷி சுனக்கிற்கு சொந்த கட்சியிலேயே ஆதரவு குறைந்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது பிரிட்டனின் முன்னாள் கலாச்சார துறை அமைச்சர் நாடின் டோரிஸ் ரிஷி சுனக்கை காட்டமாக விமர்சித்து தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள தனது ராஜினாமா கடிதத்தில்,
ரிஷி சுனிக் மோசமாக நாட்டை வழிநடத்தி வருகிறார். இதன் காரணமாக நாடு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது, இதனால் வரலாறு நிச்சயம் உங்களைக் கனிவாக மதிப்பிடாது. பிரதமர் ரிஷி சுனக் பழமைவாத கட்சியின் அடிப்படைக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டார். என் மீது தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல் நடக்கிறது.
ஒரு நபரைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்துத் தாக்குவது ரொம்பவே மலிவானது. உங்கள் அரசு எந்தளவுக்குச் சென்றுவிட்டது என்பதையே இது காட்டுகிறது. நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்பு பதவியேற்றதிலிருந்து, அர்த்தமுள்ள எதுவும் நடக்கவில்லை. உங்களுக்கு மக்களிடம் இருந்து எந்த ஆதரவும் இல்லை. அரசு தள்ளாடுகிறது" என்று விமர்சித்துள்ளார்.
Also Read
-
இளம் அரசு பணியாளர்கள் : 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
-
“விஸ்வகுருவுக்கா இந்த நிலைமை? ; உலக நாடுகள் சிரித்திருக்க மாட்டார்களா?” : முரசொலி தலையங்கம்!