உலகம்

விரைவில் ஏலத்துக்கு வரவுள்ள Twitter நிறுவனத்தின் பொருள்கள்.. எலான் மஸ்க் முடிவு.. எகிறும் எதிர்பார்ப்பு!

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் கைப்பற்றி ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்தார். மேலும் கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனிடையே ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். இதுதவிர ப்ளூடிக் முறையிலும் எலான் மஸ்க் மாற்றத்தை கொண்டுவந்தார். அதன்படி தனிநபர், தனியார் அமைப்புகளுக்கு ப்ளூ டிக், அரசியல் பிரமுகர்கள், அரசு சார்ந்த அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக், தொழில் சார்ந்த நிறுவனங்களின் கணக்குகளுக்கு மஞ்சள் டிக் என அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் தற்போது மற்றொரு மாற்றமாக ட்விட்டரில் இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுபோன்ற காரணங்களால் தற்போது ட்விட்டரை விட்டு பலர் வெளியேறி வருவதாக கூறப்பட்டது. மேலும், ட்விட்டரின் நீண்ட நாள் போட்டியாளரான மெட்டா நிறுவனம் ட்விட்டருக்குப் போட்டியாக Threads என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி வரவேற்பை பெற்றதும் கவனிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் எலான் மஸ்க்ட்விட்டரின் அடையாளமாக பல ஆண்டுகளாக நீலக்குருவி இருந்த நிலையில், தற்போது அதனை X என்ற ஆங்கில எழுத்துக்கு எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது ட்விட்டர் நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு பொருள்களை இரண்டாம் கட்ட ஏலத்தில் விற்பனை செய்ய எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளார். இந்த ஏலம் வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.அதன்படி ட்விட்டர் பில்டிங்கில் உள்ள பறவை, காபி டேபிள்கள், நாற்காளிகள், DJ பூத்துகள் உள்ளிட்ட 584 பொருள்கள் ஏலத்தில் வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஈழத்தை பிரபல ஹெரிடேஜ் குளோபல் பார்ட்னர் என்னும் ஏல நிறுவனம் நடத்த உள்ளது.

இதற்கும் முன்னர் இதுபோல ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் இருந்த 100 பொருள்களை ஏலம் விடப்பட்டதால், ட்விட்டரின் முன்னாள் லோகோவான பறவை 1 லட்சம் டாலருக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நாடாளுமன்றத்துக்கு மோடி வந்ததையே சாதனை போல பாஜகவினர் கொண்டாடுகிறார்கள்.. -சிலந்தி கட்டுரை விமர்சனம் !