உலகம்
திடீரென மலையில் மோதிய விமானம்.. காட்டுத் தீயை அணைக்க முயன்றபோது நேர்ந்த சோகம் ! - எங்கு தெரியுமா ?
கிரேக்க நாட்டில் அமைந்துள்ளது எவியா (Evia) என்ற தீவு. இங்கு கரிஸ்டோஸ் என்ற அடர்ந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத் தீ கடந்த 1 வாரத்துக்கும் மேலாக பரவி வருவதால் அங்கிருக்கும் விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மேலும் அருகில் இருக்கும் ஊர் பகுதி மக்களுக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்த காட்டுத் தீ விவகாரம் அரசுக்கு தெரிந்து இதனை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் காட்டுத் தீ கட்டுக்குள் வரவில்லை. இரவு - பகல் என்றும் பாராமல் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த காட்டுத்தீயால் சில நிலங்கள் கருகியுள்ளது.
எனவே விமானம் மூலம் தண்ணீர் பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று தீயணைப்பு துறையினர் எண்ணி, அதற்கான பணியில் ஈடுபட்டனர். அதன்படி CL-215 விமானம் மூலம் 34 மற்றும் 27 வயதான இரண்டு விமானிகள் தீயை அணைக்க களம் கண்டனர். அப்போது பறந்துகொண்டிருந்த விமானத்தை, எதிரில் இருக்கும் மலையில் மோதாமல் இருப்பதற்காக விமானி திரும்பியுள்ளார்.
அப்போது விமானம் மற்றொரு மலையில் மோதி விபத்துக்குளானது. இந்த விபத்தில் அந்த பகுதியில் இருந்த முதியவர் ஒருவரும் பரிதாபமாக பலியானார். மேலும் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழு அவர்கள் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த விபத்திற்கு முக்கிய காரணம் விமானம் ஸ்டாலிங் ஆனது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
காட்டு காட்டுத் தீயை அணைக்க முயன்ற விமானம் மலையில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் பயணம் செய்த CL-215 விமானம், காட்டு தீயை அணைக்கவும், கடல்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபடவும் பயன்படுத்த கூடிய ஒன்றாகும். இந்த விமானம் அதிகபட்சமாக 348 கி.மீ வேகத்தில் பறக்கும்; பலத்த காற்று வீசினாலும் இந்த விமானத்தால் நிலையாக பறக்கக்கூடிய அம்சத்தை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!