உலகம்
குடும்பம் தான் எல்லாமே.. ரூ.340க்கு பதில் ரூ.90 கோடி.. மனைவி - மகனால் ஒரே நாளில் கோடீஸ்வரரான இளைஞர் !
சீனாவைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளின் பிறந்ததேதியைப் பயன்படுத்தி அதே எண்ணில் லாட்டரிச் சீட்டு வாங்கியுள்ளார். அதற்கு எவ்வுளவு பரிசு கிடைத்துள்ளது தெரியுமா? 90 கோடி ரூபாய்.
கிழக்கு சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தில்அமைந்துள்ள ஹாங்சூவில் வூ என்ற இளைஞர் வசித்து வருகிறார். 30 வயதான இவருக்கு திருமணமாக மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இந்த சூழலில் பணி நிமித்தம் காரணமாக தனது குடும்பத்தை விட்டு வேறொரு இடத்தில வசித்து வருகிறார். இந்த சூழலில் இந்த மாத ஆரம்பத்தில் லாட்டரி கடைக்கு சென்றுள்ளார்.
அங்கே இந்திய மதிப்பில் ரூ.340க்கு 15 லாட்டரி சீட்டு பெற்றுள்ளார். அப்போது இந்த லாட்டரி சீட்டுக்கான குழுக்கள் முறை, கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்றுள்ளது. அப்போது அதில் வூ வாங்கிய லாட்டரி சீட்டு இருந்துள்ளது. மேலும் அவருக்கு அதில் 77 மில்லியன் yuan (இந்திய மதிப்பில் சுமார் ரூ.90 கோடி வரை) கிடைத்துள்ளது.
அதாவது இவர் வாங்கிய ஒவ்வொரு லாட்டரி சீட்டுக்கு சுமார் ரூ.5 கோடி வரை பரிசுகள் விழுந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் 90 கோடி வரை ஜாக்பாட் அடித்து ஒரேநாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். இதனால் அவர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். அந்த சீட்டுகளை தனது மனைவி, பிள்ளைகளின் பிறந்த தேதியை குறிப்பிட்டே அதனை வாங்கியுள்ளார். மேலும் இந்த மகிழ்ச்சியை குறித்து அவர் பேசுகையில், தனது மனைவி, பிள்ளைகள் தனக்கு லக்கி சார்ம் எனவும், அவர்கள் தொடர்பான தேதிகளில் உள்ள எண்களை வைத்த லாட்டரி சீட்டு வாங்கி இது வரை பல பரிசுகள் கிடைத்துள்ளது.
இதற்கு முழு காரணம் தனது குடும்பம் தான் என்றும், தனது மனைவிக்கு மிகவும் நன்றி எனவும் பூரிப்பில் தெரிவித்தார். மேலும் தான் பல வருடங்களாக லாட்டரி சீட்டு வாங்கி வருவதாகவும், தன்னை ஒருபோதும் தனது குடும்பத்தினர் தடுத்தது இல்லை எனவும் தெரிவித்தார். ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.
Also Read
-
“எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
2,18,000 மெ.டன் கொள்ளளவிலான 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல்! : முழு விவரம் உள்ளே!
-
ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியம் : ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“மதவாத அமைப்பினருக்கு வளைந்து கொடுக்கும் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன்” : மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு!
-
இவர்கள் சித்தாத்தம் இருக்கும் வரைம் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது : திவ்யா சத்யராஜ் அதிரடி பேச்சு