உலகம்

ட்ரில்லிங் மிஷினில் ஓட்டை.. மூளையில் சிப் பொறுத்த எண்ணி தனக்கு தானே Operation: விபரீதத்தில் முடிந்த கனவு!

கனவுகளை கட்டுப்படுத்த எண்ணிய நபர் ஒருவர் தனக்கு தானே ஆபரேஷன் செய்து மூளையில் சிப் பொருத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரில்லிங் மிஷினில் ஓட்டை.. மூளையில் சிப் பொறுத்த எண்ணி தனக்கு தானே Operation: விபரீதத்தில் முடிந்த கனவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் நகரை சேர்ந்தவர் மிகைல் ரடுகா (Mikhail Raduga). 40 வயதான இவருக்கு வழக்கமாக அனைவர்க்கும் வருவது போல் தினமும் கனவுகள் வந்துள்ளது. இந்த கனவுகளால் இவர் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் இவர் ஒரு புதிய முயற்சியை எடுக்க நினைத்துள்ளார். அதன்படி தனது தலையில் ஓட்டை போட்டு மூளையில் சிப் ஒன்றை பொறுத்த எண்ணியுள்ளார். அதன் மூலம் தனது கனவுகளை கட்டுப்படுத்த எண்ணியுள்ளார்.

ட்ரில்லிங் மிஷினில் ஓட்டை.. மூளையில் சிப் பொறுத்த எண்ணி தனக்கு தானே Operation: விபரீதத்தில் முடிந்த கனவு!

ஆனால் இதுபோல் மூளையில் சிப் பொறுத்துவது என்பது சட்டத்துக்கு புறம்பானது என்பதால், மருத்துவரை அணுகாமல் தனக்கு தானே ஆபரேஷன் செய்துகொள்ள திட்டமிட்டார். சுமார் 1 ஆண்டுகாலமாக திட்டமிட்ட இவர், ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை தலைக்கு எவ்வாறு செய்வது என்று Youtube-ல் பார்த்து வந்துள்ளார். பின்னர் அதற்கு தேவையான கருவிகள் உபகரணங்களை வாங்கி ஆபரேஷன் செய்ய தொடங்கியுள்ளார்.

ட்ரில்லிங் மிஷினில் ஓட்டை.. மூளையில் சிப் பொறுத்த எண்ணி தனக்கு தானே Operation: விபரீதத்தில் முடிந்த கனவு!

அதன்படி கடந்த மே மாதம் 17-ம் தேதி ட்ரில்லிங் மிஷின், சிப் உள்ளிட்டவையை வாங்கி தனது தலையில் துளையிட்டு, சிப் ஒன்றையும் பொறுத்தியுள்ளார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆபரேஷனில் அவரது உடலில் இருந்து சுமார் 1 லிட்டருக்கும் மேலாக இரத்தம் வெளியேறியுள்ளது. இதனால் அவரது உடல்நிலை மிகவும் சோர்வாக இருந்தது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் நலமாக உள்ளார். கனவுகளை கட்டுப்படுத்த தனக்கு தானே ஆபரேஷன் செய்து தன்னுடைய மூளையில் சிப்பை பொருந்தியது வெற்றிகரமான அறுவை சிகிச்சை என்று அவரே தெரிவித்துள்ளார்.

ட்ரில்லிங் மிஷினில் ஓட்டை.. மூளையில் சிப் பொறுத்த எண்ணி தனக்கு தானே Operation: விபரீதத்தில் முடிந்த கனவு!

இந்த நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 19-ம் தேதி அவர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், “கடந்த மே 17-ம் தேதி எனக்கு நானே இந்த ஆப்ரேஷனை செய்து கொண்டேன். மூளையைத் துளையிட்டு உள்ளே எலக்ட்ரோடு பொருத்தினேன்.. கனவுகள் வரும் போது அதை முறையாகச் சோதனை செய்ய எனக்கு இது தேவைப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு சேர்ந்து தனக்கு செய்யப்பட்ட ஆபரேஷன் குறித்த புகைப்படத்தையும் அதில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான செய்தி அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போல் விபரீத முயற்சிகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories