உலகம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக அறிவித்த இஸ்ரேல்.. நிபுணர்கள் அச்சத்துக்கு காரணம் என்ன?
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதில் இருந்து இணையஉலகம் செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் Artificial Inteligence-ஐ பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமீபத்திய ஆண்டுகளில் பல மடங்கு முன்னேறியுள்ளது, தற்போதைய நிலையில், செயற்கை நுண்ணறிவு செயலிகள் பல மடங்கு பெருகியுள்ளன. அதிலும் சமீபத்தில் அறிமுகமான Chat GPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும்.
இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் Chat GPT-யால் தரமுடியும். அதிலும் கல்வி நிலைய பயன்பாடுகளில் கடிதம் முதல் கட்டுரை வரை அனைத்தையும் இதனால் செய்யமுடியும்.
அதேநேரம் கூகிள் போன்ற பல்வேறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு குறித்த ஆய்வில் இறங்கியுள்ளதால் விரையில் அதன் தரம் பெரிய அளவில் உருவாகும் என கூறப்படுகிறது. இது தவிர ஏராளமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு புதிய விஷயங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ராணுவத்தில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. வான்பாதுகாப்பு போன்ற அதிமுக்கிய தொழில்நுட்பங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில், முழுமையாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தாமல் மனித மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை நடைபெறும் என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளார்.
சில மணி நேரங்கள் ஆகும் பணிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒரு சில நிமிடங்களில் முடித்துவிடும் எனவும் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், இஸ்ரேல் ராணுவத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சிறிய தவறு செய்து இதனால் ஏவுகணை பொதுமக்கள் மேல் விழுந்து பாதுகாப்பு நடைபெற்றால் அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும், அதற்கு யார் பொறுப்பேற்பார்கள் என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Also Read
-
”பெரியார் அறிவுலகம்.. திறந்து வைப்பதில் என்ன பெருமை.. உருவாக்குவதில்தான் பெருமை”: மு.க.ஸ்டாலின் அறிக்கை!
-
விஜய்யின் ஆந்திரா பயணத்தில் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை? : தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் கேள்வி!
-
மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? : இரட்டை வேட தவெக அரசுக்கு கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
த.வெ.க.வின் நிர்வாகத் தோல்வியைக் கண்டித்து சென்னையில் தி.மு.க ஆர்ப்பாட்டம்! : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
-
“மதத்தைக் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூகநீதிக்கு எதிரானது !” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!