உலகம்
”சாத்தான் சொன்னதால் மனைவியின் மூளையை சாப்பிட்டேன்”.. போலிஸார் விசாரணையில் ஷாக் கொடுத்த கணவர் !
வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் அல்வாரோ. 32 வயதான இவருக்கு மரியா என்ற மனைவி உள்ளார். இந்த சூழலில் இவருக்கு சாத்தானை வழிபாடு செய்யும் நம்பிக்கை இருந்துள்ளது. எனவே அதில் மூழ்கி இருந்துள்ளார். மேலும் இவர் போதைக்கும் அடிமையாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 29-ம் தேதி தனது மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும் அவரை கொன்று துண்டு துண்டாக வெட்டி அவரது உடலை தனித்தனி பாகமாக ஆக்கியுள்ளார். அது மட்டுமின்றி, தனது மனைவியின் மூளையை வெளியே எடுத்து அதனை தான் சாப்பிடும் சாப்பாடோடு கலந்து சாப்பிட்டுள்ளார்.
போதையில் இவ்வளவு கொடூரத்தை செய்த அந்த நபர் தனது மனைவியின் உடல் பாகத்தை சில பாகங்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டுவிட்டு, மேலும் சில பாகங்களை மலையில் வீசியுள்ளார். மீதமுள்ளவற்றை தனது வீட்டிலேயே வைத்துள்ளார். மேலும் அவரது மனைவியின் மண்டை ஓட்டை சிகெரட் சாம்பல் போடும் ஆஷ் டிரேவாக பயன்படுத்தி வந்துள்ளார்.
சுமார் 2 நாட்களுக்கு பிறகு அந்த நபருக்கு போதை தெளிந்துவிட்டது. இதையடுத்து தனது வளர்ப்பு மகளை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியுள்ளார்.
பின்னர் அவர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கூறிய பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் குற்றவாளி அல்வாரோவை அதிரடியாக கைது செய்து விசாரித்தனர். அப்போது சாத்தானை வழிபடும் தன்னை, சாத்தான் தான் இவ்வாறு செய்ய சொன்னதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.
மனைவியை கொடூரமாக கொன்று அவரது மூளையை சாப்பிட்ட கணவரின் செயல் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திருமணமான மரியாவுக்கு 5 குழந்தைகள் இருக்கும் நிலையில், அல்வாரோவுடன் சந்திப்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் காதலித்த பிறகு, தனது முன்னாள் கணவரை விவாகரத்து செய்த மரியா, கடந்த ஆண்டு தன அல்வாரோவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 1 ஆண்டிலே இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!