உலகம்
Views-க்காக இப்படியா?... பிரபல யூடியூபருக்கு 20 ஆண்டு சிறை: அப்படி என்ன செய்தார்?
யூடியூப் தற்போது வருமானத்தை ஈட்டும் முக்கிய தளமாக மாறியுள்ளது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை பலரும் தங்களுக்கு என்று ஒரு யூடியூப் பக்கத்தை உருவாக்கி அதில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதன் மூலம் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
உணவு, விளையாட்டு, தொழில் நுட்பம், கலை, பொழுதுபோக்கு, சினிமா, நாடகம், நகைச்சுவை என பல வீடியோக்களை எடுத்து பதிவேற்றி வருகின்றனர். இப்படிப் பதிவேற்றும் போது தங்களது வீடியோக்களை அதிகம் பேர் பார்க்க வேண்டும் என்பதற்காகச் சிலர் எல்லைகளை மீறி வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியும் வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ட்ரெவர் ஜேக்கப் என்பவர் யூடியூப் வியூவ்ஸ்க்காக வேண்டும் என்றே விமானத்தை விபத்துக்குள்ளாக்கி வீடியோ வெளியிட்டதில் அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ட்ரெவர் ஜேக்கப். முன்னாள் விமானியான இவருக்கு Trevor Jacob என்ற யூடியூப் பக்கம் உள்ளது. இதில் திரில்லர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இப்படிக் கடந்த 2021ம் ஆண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் மேலே பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் கீழே குதிக்கிறார். பிறகு அவர் ஓட்டிவந்த சிறிய விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகிறது. பிறகு விமானம் விழுந்த இடத்திற்கு சென்று விமானம் எப்படி உடைந்துள்ளது என்பதை காட்டுகிறார். பின்னர் காட்டு வழியாக நடந்து செல்கிறார். இந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை 40 லட்சத்திற்கும் மேல் பார்த்துள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சர்ச்சையானதை அடுத்து அவரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் வேண்டும் என்றே விபத்தை ஏற்படுத்தியதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அவரது விமானி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!