உலகம்
நடுவானில் விமானத்தில் பற்றிய தீ.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்.. இறுதியில் நடந்தது என்ன ?
சமீப காலமாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் அதிகம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக விமானங்கள் அடிக்கடி அவசரமாக தரையிறங்கும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் விமானம் ஒன்று தீ பிடித்த காரணத்தால் அவசரமாக தரையிறங்கியுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உலா கொலம்பஸ் நகரில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் விமானம் ஒன்று அரிசோனா மாகாணத்திற்கு சென்றுள்ளது. விமானம் கொலம்பஸ் நகரில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமானத்தின் எஞ்சினில் பறவை ஒன்று மோதியுள்ளது.
இதன் காரணமாக எஞ்சினில் இருந்து புகை எழும்பத்தொடங்கியுள்ளது. இதனை உணர்ந்த விமானிகள் விமான கட்டுப்பாடு அறைக்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர். இதனிடையே எஞ்சின் திடிரென தீப்பிடித்து எரிய இதனைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதற்குள் விமானம் அவசரமாக தரையிங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் புறப்பட்ட கொலம்பஸ் நகரிலேயே விமானம் அவசரம் அவசரமாக தரையிறங்கியது. அதன் பிறகு பயணிகள் அவசரம் அவசரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் எஞ்சினில் பிடித்த தீயும் அணைக்கப்பட்டது.
அதன்பின்னன் பயணிகள் அனைவரும் வேறு விமானத்தில் ஏற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாரும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!