உலகம்

ட்விட்டரை விற்க தயார்,, ஆனால் அதற்கு இதுதான் கண்டிஷன் -எலான் மாஸ்க் அதிரடி அறிவிப்பு !

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டனர்.மேலும் கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்துனர்.

கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டு நிலையில், எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.அதைத் தொடர்ந்து ட்விட்டர் ஊழியர்களை நேரடியாக சந்தித்த எலான் மஸ்க், வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றும், முன்புபோல அலுவலகத்தில் இலவசமாக உணவு போன்ற எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாது என்று கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படி தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் ட்விட்டர் செயலியின் லோகோவையே மாற்றினார் எலான் மஸ்க். அதனைத் தொடர்ந்து மீண்டும் ட்விட்டரின் லோகோவாக நீல நிற குருவியையே மாற்றினார். இப்படி தொடர்ந்து பல விசித்திரங்களை செய்துவரும் எலான் மஸ்க் தற்போது பிபிசி ஊடகத்துக்கு பிரத்தியேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தகுந்த நபர் கிடைத்தால் ட்விட்டரை தான் விற்க தயார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ட்விட்டரை நடத்துவது ஏதோ ஒரு பார்ட்டிக்கு செல்வது போல அல்ல. அந்த வலி மிக அதிகம் எனவும் ட்விட்டரை நிர்வகிப்பது சலிப்பாக இல்லை. அது ஒரு ரோலர் கோஸ்டர் உணர்வு என்றும் தெரிவித்துள்ளார்.அதோடு ட்விட்டரை வாங்கியபின்னர் கடந்த பல மாதங்களாக அழுத்தம் நிறைந்துள்ளது என்று கூறியுள்ள அவர், அந்த நிறுவனத்தை தான் வாங்கியது சரியான முடிவு என்றே தான் நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி சமூக வலைதளத்தில் பேசுபோருள் ஆகியுள்ளது.

Also Read: ஆபாச புகைப்படம்.. பாலியல் வன்கொடுமை.. வழிப்பறி.. டிக்டாக் பிரபலம் ‘மீசைக்கார வினீத்’ அதிரடி கைது !