உலகம்

நடுவானில் விமானியின் முதுகில் ஊர்ந்த விஷ நாகம்.. அதிர்ந்த பயணிகள்.. இறுதியில் நடந்தது என்ன ?

தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோன்டைன் நகரில் இருந்து பிரிட்டோரியா நோக்கி பீச்கிராப்ட் பேரோன் 58 என்ற சிறிய ரக விமானம் சென்றுகொண்டிருந்தது. இந்த விமானத்தில் ருடால்ப் எராஸ்மஸ் என்பவர் விமானியாக விமானத்தை ஓட்டி சென்றுள்ளார்.

விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது விமானியின் முதுகில் எதோ குளிர்ச்சியாக இருந்துள்ளதை அவர் உணர்ந்துள்ளார். முதலில் அது தண்ணீராக இருக்கலாம் என கருதிய அவர் அதை கண்டுகொள்ளவில்லை. பின்னர் விமானத்தில் இடதுபக்கம் பார்த்த போது அங்கு கொடிய விஷமுடைய நாகப்பாம்பு ஒன்று இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், முதலில் இதுகுறித்து பயணிகளுக்கு ஏதும் சொல்ல வேண்டாம் என நினைத்துள்ளார். ஆனால் பாம்பு பயணிகள் இருக்கும் பகுதிக்கு சென்றால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என விமானத்தில் பாம்பு இருப்பதாகவும், யாரும் பயப்படவேண்டாம், விரைவில் அருகில் இருக்கும் விமானநிலையத்தில் விமானம் தரையிறக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதன்பின்னர் அருகில் இருந்த வெல்கோம் நகர விமான நிலையத்துக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தரையிறங்க அனுமதி வழங்கினர். அதன்பின்னர் விமானம் பத்தியமாக வெல்கோம் நகரில் தரையிறக்கப்பட்டது.

முன்னதாக விமானம் ப்ளூம்ஃபோன்டைன் நகரில் இருந்து கிளம்பும் முன்னரே அங்கு பாம்பை இருவர் கண்டதாகவும், ஆனால் சோதனை செய்தபோது விமானத்தில் ஏதும் இல்லாததால் விமானம் கிளம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு விமானம் தரையிறங்கிய பின்னரும் அங்கு சோதனையில் பாம்பு சிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: பெண்ணிடம் அத்துமீறிய BIG BASKET டெலிவரி பாய்.. அலட்சியமாக பதிலளித்த Customer Care.. பெண் பகிரங்க புகார்!