உலகம்
உயிரோடு கல்லறைக்குள் புதைக்கப்பட்ட பெண்.. கடைசி நேரத்தில் வந்த போலிஸார். பிரேசிலை உலுக்கிய சம்பவம் !
பிரேசில் நாட்டில் மினாஸ் கெராயிஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கல்லறை தோட்டம் அருகே கல்லறைக்குள் இருந்து பெண்ணின் அழுகுரல் மற்றும் முனங்கல் சத்தம் அங்கிருப்பவர்களுக்கு கேட்டுள்ளது. முதலில் கற்பனை என கருதிய நிலையில், தொடர்ந்து அந்த சத்தம் கேட்டுவந்ததால் இது குறித்து காவல்நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் கல்லறைக்குள் இருந்து பெண்ணின் குரல் கேட்பதை உறுதி செய்து கல்லறையை உடைத்து அது மோசமான உடல் நிலை பாதிப்புடன் இருந்த பெண்ணை அங்கிருந்து மீட்டனர். மூச்சி விட கடினமாக நிலையில் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் அந்த பெண்ணிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, முகமூடியணிந்த இருவர் தம்மை கல்லறை பகுதிக்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் கடுமையாக தாக்கி, கல்லறைக்குள் வைத்து மூடியதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், போலிஸார் விசாரணையில் இந்த பெண் போதைமருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பவர் என்றும், அந்த கும்பல் கொடுக்கும் போதை மருந்தை இவர் பாதுகாத்து வந்ததாகவும், பின்னர் இவர் அந்த கும்பலை ஏமாற்ற முயன்றதன் காரணமாக அந்த கும்பல் இவரை தாக்கி உயிரோடு கல்லறைக்குள் தள்ளியதாகவும் கூறியுள்ளனர்.
சுமார் 36 வயதுடைய அந்த பெண்ணுக்கு தலையில் கடுமையாக காயம் இருப்பதால் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்றும், அவருக்கு குணமானதும் இது தொடர்பாக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஜெம் வீரமணி வழக்கில் தி.மு.க மீது பொய்யாக அவதூறு.. தவெகவின் இழிவான செயல்” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமா தவெக? : கனிமொழி கேள்வி!
-
ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!