உலகம்

நடுவானில் மயக்கமடைந்த விமானி.. சினிமா பாணியில் பயணிகளை காப்பாற்றிய சக பயணி.. நடந்தது என்ன ?

நடுவானில் விமானத்தில் சென்றுகொண்டிருக்கும் போது விமானிகளுக்கு மயக்கம் அல்லது இயக்கமுயலாத நிலை ஏற்பட்டு பயணிகள் ஆபத்தில் இருக்கும் போது விமானம் ஓட்டத் தெரிந்த பயணி யாரும் விமானம் ஊட்டி அனைவரையும் காப்பாற்றுவது போல பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அதேபோல உண்மை சம்பவம் ஒன்றும் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் இருந்து கொலம்பஸ் நகருக்கு 'சவுத்வெஸ்ட்' விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. இந்த விமானத்தில் வழக்கம்போல இரு விமானிகள் இருந்த நிலையில், அவர்களின் ஒருவருக்கு பயண அனுபவம் குறைவு என கூறப்படுகிறத்து.

இந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அனுபவம் வாய்த்த விமானி ஒருவர் திடீரென மயக்கமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விமான குழுவினர் விமானியை எழுப்ப முயன்றும் அவ்ர்களால் அது முடியவில்லை. மற்றொரு விமானிக்கு பயண அனுபவம் குறைவாக இருந்த காரணத்தால் நிலைமையை சமாளிக்க முடியாமல் இருந்துள்ளது.

இதனால் வேறு வழியின்றி பயணிகள் யாருக்காவது விமானம் ஓட்டத் தெரியுமா என விமான குழுவினர் விசாரித்துள்ளனர். அதில் ஒருவருக்கு விமானம் ஓட்ட தெரியும் எனக் கூறிய நிலையில், அவர் விமானிகள் அறைக்குள் நுழைந்து இது தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் விமானத்தை இயக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அந்த இரு விமானிகளும் சேர்ந்து விமானத்தை அவசர அவசரமாக அருகில் இருந்த விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளனர். அங்கு தரையிறங்கியதும் மயக்கமடைந்த பைலட் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பயணியாக வந்து விமானத்தை ஓட்டி அனைவரையும் காப்பாற்றிய அந்த நபர் வேறொரு விமானத்தில் விமானியாக ஓட்டிவந்துள்ளார் என்றும், இதன் காரணமாகவே அவர் அச்சம் இன்றி இந்த விமானத்தை தரையிறக்கினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: சாதி பாகுபாட்டுக்கு எதிராக சட்டம்.. கலிஃபோர்னியா சபையில் அறிமுகம்.. சாதிக்கு எதிராக திரும்பும் அமெரிக்கா!