உலகம்

சாதி பாகுபாட்டுக்கு எதிராக சட்டம்.. கலிஃபோர்னியா சபையில் அறிமுகம்.. சாதிக்கு எதிராக திரும்பும் அமெரிக்கா!

சாதி பாகுபாட்டுக்கு எதிராக சட்டம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண சபையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாதி பாகுபாட்டுக்கு எதிராக சட்டம்.. கலிஃபோர்னியா சபையில் அறிமுகம்.. சாதிக்கு எதிராக திரும்பும் அமெரிக்கா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக சாதிய பாகுபாடு நிலவி வருகிறது. இதன் காரணமாகி சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் பட்டியலின,பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். பொது இடத்தில நடக்க, நீர் அருந்த, படிக்க, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யகூட சாதியின் பேரில் இங்கு தடை இருந்தது.

ஜோதிராவ் பூலே, பெரியார், நாராயண குரு ஆகியவர்களின் போராட்டம், மற்றும் பெரியாரிய இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம் போன்றவற்றின் காரணமாக பட்டியலின,பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு அடிப்படை உரிமை கிடைக்க தொடங்கியது. எனினும் இந்தியாவின் பெரும்பாலான மக்களுக்கு இன்னும் சாதிய மனப்பான்மையே இருக்கிறது.

சாதி பாகுபாட்டுக்கு எதிராக சட்டம்.. கலிஃபோர்னியா சபையில் அறிமுகம்.. சாதிக்கு எதிராக திரும்பும் அமெரிக்கா!

இப்படி சாதிய மனநிலை கொண்ட மக்கள் வெளிநாடு சென்றால் கூட தங்களோடு தங்கள் சாதி என்னும் மலத்தை எடுத்துச்சென்று வெளிநாடுகளிலும் சாதிய மனப்பான்மையை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவின் இந்தியர்கள் பெருமளவில் குடியேறியுள்ள நிலையில், அங்கு இந்தியர்களின் சாதிய மனப்பான்மை குறித்த குற்றச்சாட்டு அடிக்கடி வெளிவருகிறது.

இது போன்ற குற்றசாட்டுகள் தொடர்ந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தலைநகரமான நியூயார்க் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகர சபையில் இந்திய-அமெரிக்கரும், சியாட்டில் நகர சபையின் உறுப்பினருமான க்ஷாமா சாவந்த் என்பவர், சாதி,இனம், நிறம், பாலினம், மதம் மற்றும் தேசியம் , அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்யும் வகையில் அவசர சட்டத்தை அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்த அந்த சட்டம் நிறைவேற்றியது. இதன் மூலம் சாதி பாகுபாட்டுக்கு எதிராக சட்டம் இயற்றிய முதல் அமெரிக்க நகரம் என்ற பெருமை சியாட்டிலுக்கு கிடைத்தது.

சாதி பாகுபாட்டுக்கு எதிராக சட்டம்.. கலிஃபோர்னியா சபையில் அறிமுகம்.. சாதிக்கு எதிராக திரும்பும் அமெரிக்கா!

இந்த நிலையில், இதே போன்ற சட்டம் அமெரிக்காவின் முக்கிய மாகாணமும், அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமுமான கலிஃபோர்னியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க காங்கிரஸில், செனட்டராக இருக்கும் ஆயிஷா வஹாப் என்பவரால் இந்த மசோதா கலிஃபோர்னியா மாகாண சபையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இது நிறைவேறினால் சாதிய பாகுபாடுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாக இது இருக்கும். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலே அதிகம் இந்தியர்கள் வசிக்கும் நிலையில், இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது முக்கிய அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories