உலகம்
சிறையில் ஆண் கைதிகளுடன் பாலியல் உறவு.. 18 பெண் காவலர்கள் செயலால் அதிர்ச்சி.. - பரபரத்த இங்கிலாந்து !
பொதுவாக குற்றம் புரிந்தவர்கள் சிறைக்கு செல்வது வழக்கம். இவ்வாறு சிறை செல்லும் அவர்கள், அங்கு தண்டனை அனுபவித்து வருவர். அது சிறிய குற்றமாக இருந்தாலும் சரி, பெரிய குற்றமாக இருந்தாலும் சரி.. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறுவது போல், குற்றம் புரிந்த அனைவரும் சிறைவாசம் அனுபவிப்பர்.
இவை உலக அளவில் அனைத்து இடங்களிலும் காணப்படும். சிறையில் இருக்கும் அவர்கள் தண்டனை அனுபவிப்பர். ஆனால் சிலர் தங்கள் பணத்தை வைத்து லஞ்சம் கொடுத்து சிறைக்குள்ளே சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவர். இது போன்றவை உலகம் முழுக்க பல்வேறு சிறைகளில் நடக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவும் லஞ்சம் கொடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
இது உலகம் முழுவதும் நடக்கும். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் இங்கிலாந்து நாட்டு சிறை ஒன்றில் நடந்துள்ளது. அங்கு லஞ்சம் மட்டுமல்ல, பெண் காவலர்கள் சில சிறைக்கைதிகளுடன் நெருக்கமாகவும், உடலுறவு கொண்டும் இருந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் ரெக்ஸ்ஹாம் (wrexham) என்ற இடத்தில் எச்எம்பி பெர்வின் (HMP Berwyn) என்ற சிறை சாலை அமைந்துள்ளது. அந்த பகுதியில் பிரபலமான பெரிய சிறை சாலையாக இருக்கும் இது, ஆண் கைதிகளுக்கு மட்டுமே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிறையாகும். இந்த சிறையில் சிறிய குற்றம் முதல் பெரிய குற்றம் புரிந்த அனைவரும் கைதிகளாக உள்ளனர்.
அந்த வகையில் இந்த சிறையில் சுமார் 2,100 ஆண் கைதிகள் உள்ளனர்.அதேபோல் இந்த சிறைக்கு பாதுகாப்புப் பணிக்காக சுமார் 500 காவலர்கள் உள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் காவலர்களும் அடங்குவர். இவர்களில் சிலர் சிறைக்கைதிகளிடம் நெருக்கமாக இருந்துள்ளனர். அதோடு லஞ்சமும் வாங்கியுள்ளனர்.
இந்த பெண் காவலர்களில் சிலர் அந்த சிறையில் இருந்த கைதிகளுடன் நெருக்கமாக இருந்துள்ளது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து மேலதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி இவர்களில் 18 பேர் குற்றம் புரிந்தவர்களாக கருதி, அதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பெண் காவலர்களில் சிலர், சில கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு மொபைல் போன்கள், போதை பொருட்களை உள்ளிட்டவையை பரிமாறிக்கொண்டிருந்தனர். அதோடு சில காவலர்கள் கைதிகளுடன் நெருக்கமாக இருந்தும், ஆபாச மெசேஜ் செய்தும் வந்துள்ளனர். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட 18 பேர் மீதும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டதோடு, மீதமுள்ள 15 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் இருக்கும் பிரபல ஆண்கள் சிறைக்கைதிகளிடம் பெண் காவலர்கள் நெருக்கமாக இருந்துள்ளது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!