உலகம்

அமேசான் காடுகளில் புதிய பழங்குடி மக்கள் கண்டுபிடிப்பு.. விமானம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரல் !

பிரேசில்- பொலிவியா எல்லையில் உள்ள ரோண்டோனியா மாநிலத்தில் உள்ள அமேசான் காடுகளில் பல நூற்றாண்டுகளாக பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். அந்த காட்டுப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு வந்ததால் பழங்குடி மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தது.

அதில், கடந்த 1970-ம் ஆண்டு நிலப்பகுதியை ஆக்கிரமித்த பண்ணையாளர்களால் அந்த பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் கொடூரமாக கொலைசெய்யப்பட்டனர். இந்த கொடுமையான தாக்குதலில் வெறும் 7 பழங்குடியினர் மட்டுமே உயிர்பிழைத்ததாக கூறப்பட்டது.

பின்னர் 1995-ம்ஆண்டு மீண்டும் நில ஆக்கிரமைப்பாளர்கள் பழங்குடியினரை தாக்கியதில் உயிரோடு இருந்த 7 பேரில் 6 பேர் உயிரிழந்தனர். அதில் ஒருவர் மட்டுமே தப்பிபிழைத்தார். தனியொருவராக 26 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அவர் மிக அரிதாகவே மனித கண்களுக்கு தென்பட்டார். கடைசி மனிதரின் உடல் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இறந்துவிட்ட காரணத்தால் தற்போது அமேசான் காட்டில் பூர்வ பழங்குடியினர் யாரும் இல்லை என கருதப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வடக்கு பிரேசிலில் உள்ள யானோமாமி என்ற பகுதியில் 100 பேர் மட்டுமே கொண்ட பழங்குடி மக்கள் வசித்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் எடுக்கப்பட்ட வான்வெளி புகைப்படங்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் யானோமாமி யானோ என்று அழைக்கப்படும் பிரமாண்டமான வீட்டிற்குள் பல ஆண்களும் பெண்களும் வசித்து வருவதும், அவர்களில் சிலர் ஆடை அணிந்தும், ஆடை இல்லாமலும் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Also Read: கீழடி ஆய்வுகளை உலக மக்­கள் மத்­தி­யி­லும் கொண்டு சேர்த்துவிட்டார் முத­ல­மைச்­சர் -முரசொலி புகழாரம் !