உலகம்
பாக். முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளருக்கு தொடரும் ஆபத்து.. குறி வைத்து துப்பாக்கி சூடு.. அதிர்வலை !
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் திருநங்கை மர்வியா மாலிக் (26). இவருக்கு செய்து வாசிப்பாளராக வேண்டும் என்று கனவு இருந்தது. அதற்காக தன்னை பலகட்ட இன்னல்களை தாண்டி தயார் படுத்திக்கொண்டார்.
அவர் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் திருநங்கையாக இருப்பதால், அவரது குடும்பத்தாரால் நிராகரிக்கப்பட்டார். பின்னர் கஷ்டப்பட்டு அழகு நிலையம் ஒன்றில் சேர்ந்த இவர், தனது படிப்பின் செலவுக்காக ஆரம்பத்தில் மேக்-அப் கலைஞராக பணியாற்றினார். தொடர்ந்து கல்லூரியில் படிக்கும் அளவுக்கு சம்பாதித்த அவர், மீடியா கோர்ஸ் படித்து முடித்தார்.
தொடர்ந்து அவர் ஒரு பேஷன் ஷோவில் மாடலிங்காக முதல்முறையாக தொலைக்காட்சியில் தோன்றினார். இது அவருக்கு அனைவர் மத்தியிலும் பல்வேறு பாராட்டுகளை பெற்று தந்தது. இதையடுத்து படிப்படியாக 2018-ம் ஆண்டு தனது 21-ம் வயதில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சேர்ந்தார். அதன்படி இவரே பாகிஸ்தானின் 'முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராகி' சாதனை படைத்தார்.
தொடர்ந்து இவர் அங்கிருக்கும் திருநங்கைகளுக்காக மாறி மாறி குரல் கொடுத்து வருகிறார். இவரது இந்த முயற்சி அங்கிருக்கும் சில பேருக்கு பிடிக்காததால், இவருக்கு பல சிக்கல்கள் வந்துள்ளது. இந்த நிலையில், இவர் மீது தற்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
அதாவது கடந்த வெள்ளிக்கிழமை மாலிக் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள மருந்தகத்தில் இருந்து மாலிக் தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால் இந்த துப்பாக்கி சூட்டில் அவர் மீது குண்டுகள் எதுவும் பாயாமல் உயிர் தப்பினார். இதுகுறித்து மாலிக் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மாலிக் கூறுகையில், "நான் பாகிஸ்தானில் உள்ள திருநங்கைகளுக்காக குரல் எழுப்பியதற்காக எனக்கு சில காலமாக கொலை மிரட்டல் வருகிறது. அதனாலே நான் சில காலங்கள் லாகூரை விட்டு சென்று இஸ்லாமாபாத்தில் தங்கியிருந்தேன். தற்போது அறுவை சிகிச்சை முடிந்து இங்கு வந்துள்ளேன். ஆனால் எனது மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இருப்பினும் நான் அதிலிருந்து உயிர் பிழைத்தேன்"
பொதுவெளியில் திருநங்கை செய்தி வாசிப்பாளர் மீது நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்” -சேந்தமங்கலம் திமுக MLA மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
-
இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை பெய்யும் : வானிலை நிலவரம் இதோ!
-
“களத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திடுவோம்!” : துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி காலமானார்...
-
வடகிழக்கு பருவமழை... சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - விவரம் உள்ளே!