உலகம்
பறந்துகொண்டிருந்தபோதே பிரிந்த உயிர்..விமான பயிற்சியாளருக்கு நேர்ந்த சோகம்..விளையாடுவதாக நினைத்த சக விமானி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்தின் லண்டன் விமான நிலையத்தில் விமான பணிப்பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அதே பாணியில் விமானி ஒருவர் அதே இங்கிலாந்தில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் பிரபல நாளிதழில் வெளியான செய்தியின்படி பிளாக்பூர் விமான நிலையத்தில் இருந்து விமானி ஒருவரும், விமான பயிற்சியாளர் ஒருவரும் வழக்கம் போல விமானத்தின் ஏறி பயணித்துள்ளனர். இருவரும் நன்கு பழகியவர்கள் என்பதால் வழக்கம் போல சிரித்து பேசி கிண்டல் செய்து வந்துள்ளனர்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமான பயிற்சியாளர் விமானியின் தோல் மீது தலை சாய்ந்துள்ளார். அப்போது அவர் தூங்குவது போல நடிப்பதால் தான் இவ்வாறு செய்கிறார் என எண்ணிய விமானி தொடர்ந்து விமானத்தில் பறந்து விமானநிலையத்தில் தரை இறங்கியுள்ளார்.
பின்னர் பயிற்சியாளரை எழுப்ப முயன்றபோது அவர் தலை சரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி இது குறித்து அவசர உதவி எண்ணை அழைத்து கூறியுள்ளார். பின்னர் அவர்கள் வந்து விமான பயிற்சியாளரை பரிசோதனை செய்தபோது அவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
அவர் இறப்புக்கு மாரடைப்பு தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், உயிரிழந்த விமான பயிற்சியாளர் எந்த பிரச்னையும் இல்லை என்று நகைச்சுவையாக கூறியதாக விமானி கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!