உலகம்
கைக்குழந்தைக்கு தனி டிக்கெட் எடுக்க வேண்டும்.. கறாராக கூறிய விமான நிறுவனம்.. அதிரடி முடிவெடுத்த தம்பதி !
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி தங்களின் கைக்குழந்தையோடு இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். அங்கு சுற்றிப்பார்த்தவர்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்கு செல்ல தங்கள் இருவருக்கு மட்டுமே அயர்லாந்து நாட்டை சேர்ந்த ரையன் நிறுவன விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
பின்னர் விமானம் கிளம்பும் நேரத்துக்கு சற்றுமுன்னர் விமான நிலையம் சென்றவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை விமான நிலைய ஊழியர்களிடம் காட்டியுள்ளனர். அதனைப் பார்த்த அவர்கள் கைக்குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், இதனை மறுத்த அந்த தம்பதி விமான நிலைய ஊழியர்களுடன் விவாதம் செய்துள்ளனர்.
ஆனால், டிக்கெட் இல்லாமல் கைக்குழந்தையை உள்ளே அனுமதிக்க முடியாது என அந்த ஊழியர்கள் உறுதிபட கூறியுள்ளனர். அதன்பின்னர் அந்த தம்பதி குழந்தைக்கு டிக்கெட் எடுப்பார்கள் என காத்திருந்த அந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அந்த தம்பதியினர் குழந்தைக்கு டிக்கெட் எடுக்காமல் தங்கள் கைக்குழந்தையை அங்கே இருந்த கவுண்டரில் விட்டுவிட்டு விமானத்தை நோக்கி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய ஊழியர்கள் குழந்தைக்கு டிக்கெட் எடுத்து உள்ளே செல்லுமாறும், இல்லையெனில் குழந்தையை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தில் இருந்தே வெளியேறுமாறும் கூறியுள்ளனர்.
ஆனால், இதற்கு அந்த தம்பதியினர் மறுத்த நிலையில், கைக்குழந்தையை தனியே விட்டு சென்ற அந்த தம்பதியை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாக பல நாடுகளில் குழந்தைகளுக்கு மொத்த டிக்கெட் கட்டணத்தில் 10% வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!