உலகம்

நரகத்தில் ரிஹானாவின் பாட்டு கூட கேட்குதாம்.. மாரடைப்பு ஏற்பட்டபோது நரகத்துக்கு சென்றதாக மதபோதகர் கருத்து!

அமெரிக்காவில் பாதிரியாராக பணியாற்றிவருபவர் ஜெரார்ட் ஜான்சன். இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு இருந்தவர்கள் இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது அவர் கிட்டத்தட்ட உயிர் இழக்கும் நிலைக்கு சென்றதாகவும், பின்னர் அவரின் உயிரை காப்பாற்றியதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், ஜெரார்ட் ஜான்சன் கண் விழித்ததும் தனது உயிர் உடலிலிருந்து பிரிந்து நரகத்திற்குச் சென்றதாகவும், அங்கு தனக்கு நேர்ந்த சம்பவங்களையும் அவர் விவரித்துள்ளார். அதன்படி மாரடைப்பு ஏற்பட்டபோது, தனது உயிர் நரகத்திற்குச் சென்றதை தெளிவாக உணர்ந்ததாக கூறியுள்ளார்.

மேலும், தந்து உயிர் பூமிக்கு மேலே செல்லாமல், பூமியின் ஆழத்துக்கு சென்றதாகவும், அதன்பின்னரே நரகம் அங்கு இருப்பதை தான் அறிந்துகொண்டதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி நகரத்தில் பிரபல பாடகியான ரிஹானாவின் Umbrella என்ற பாடலும், மெக்பெரினின் Don't Worry Be Happy என்ற பாடலையும் தான் கேட்டதாகவும் கூறியுள்ளார்.

அதோடு, இந்த பாடல்களை கேட்டபோது தீய சக்திகள் பாடல்கள் மூலம் மக்களைக் கட்டுப்படுத்துவதை தான் புரிந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். நரகத்தில் மனிதனின் கழுத்தில் சங்கிலியை போட்டு ஆவி ஒன்று நாயை போல நான்கு கால்களில் மனிதனை அழைத்துச்சென்றதை பார்த்ததாகவும், அந்த மனிதனின் உடல் முழுக்க தீ எரிந்துகொண்டிருப்பதை கண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நான் இறந்தால் சொர்க்கத்துக்கு செல்வேன் என நம்பிக்கொண்டிருந்த நிலையில், நரகத்துக்கு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், பின்னர் திடீரென உயிர் உடலுக்குள் வந்ததாகவும் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்தை சூப்பரான கதை என பலர் விமர்சித்து வருகின்றனர்.