உலகம்
1 லட்சம் ராணுவவீரர்கள்.. 18 ஆயிரம் பொதுமக்கள்.. உக்ரைன்-ரஷ்யா போரில் கொத்துகொத்தாக மடியும் உயிர்கள் !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான 7 மாத போர் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.
இந்த போர் காரணமாக ஏராளமான ராணுவவீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். அதிலும் உக்ரைனின் கிழக்கு பகுதி அதிக சேதத்தை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இந்த உக்ரைன்-ரஷ்யா போரில் சுமார் 18,358 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ. நா அமைப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியான ஐநாவின் அறிக்கையில், " உக்ரைன்-ரஷ்யா போரில் 18,358 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இறுதியானது அல்ல, உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம். அதோடு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் ஆபத்தில் இருக்கிறது. உயிரிழப்புகளை பொறுத்த அளவில், சில இடங்களிலிருந்து இன்னும் தகவல்கள் பெற்படவில்லை. அவ்வாறு தாமதமாக பெறப்படும் தகவல்களை சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் " என்று கூறப்பட்டுள்ளது. இந்த போரில் இருநாட்டை சேர்ந்த சுமார் 1 லட்சம் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !