இந்தியா

தடையை மீறி ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்ட BBC-யின் ஆவணப்படம்.. பாஜக மாணவர் அமைப்பு எதிர்ப்பு !

ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட பிபிசியின் குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படம் ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் திரையிடப்பட்டுள்ளது.

தடையை மீறி ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்ட BBC-யின் ஆவணப்படம்.. பாஜக மாணவர் அமைப்பு எதிர்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002–ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஏராளமானோர் கொள்ளப்பட்டனர். இந்த கலவத்தில் சிறுபான்மையினர் மீது நடந்த திட்டமிட்ட தாக்குதல் என உலகம் முழுவதும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது.

குஜராத் கலவரத்தின் போது 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை இந்துத்துவ கும்பல் கூட்டுப் பலாத்காரம் செய்து, அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்தது. இதனிடையே பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்ட 11 பேருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி குஜராத் பா.ஜ.க அரசு உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தடையை மீறி ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்ட BBC-யின் ஆவணப்படம்.. பாஜக மாணவர் அமைப்பு எதிர்ப்பு !

இத்தகைய கொடுமையான குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி கடந்த 17-ம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. அதில், “இந்தியா- மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தை வெளிட்டுள்ளது. இந்தப்படத்தில் பிரதமர் மோடியின் உண்மை முகம் அம்பலப்படுத்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த ஆவணப்படத்தில் குஜராத் கலவரத்தின் போது, சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட வன்முறையை தடுக்க குஜராத் காவல்துறை எந்த முயற்சியையும் மேற்கொள்ளப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த ஆவணப் படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.

தடையை மீறி ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்ட BBC-யின் ஆவணப்படம்.. பாஜக மாணவர் அமைப்பு எதிர்ப்பு !

இந்த நிலையில் ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட பிபிசியின் இந்த ஆவணப்படம் ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் திரையிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு அன்று இந்த படம் திரையிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை காண ஏராளமான மாணவர்கள் குவிந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பல்கலைக்கழக அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் ”ஒன்றிய அரசு தடை விதிப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னாள் இந்த ஆவணப்படம்திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தைப் பார்த்திருக்கிறார்கள்” என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories