உலகம்
கலவரமான பிரேசில்.. தாக்கப்பட்ட நாடாளுமன்றம், அதிபர் மாளிகை... போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்த போலிஸ் !
பிரேசில் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அப்போதைய அதிபரும் தீவிர வலதுசாரியான போல்சனாரோவும், முன்னாள் அதிபரும் இடதுசாரி வேட்பாளருமான லுலா டி சில்வாவும் போட்டியிட்டனர்.
தென்னமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நாடு என்பதால் இந்த தேர்தல் சர்வதேச அளவில் பெரும் கவனம் ஈர்த்தது. இந்த தேர்தலில் வலதுசாரி வேட்பாளர் போல்சனாரோவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்கள் செயல்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், நாட்டின் வன்முறைக்கு காரணமாக போல்சனாரோ இருந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த தேர்தல் முடிவுகளில் வலதுசாரியான ஜெயிர் போல்சனாரோவை தோற்கடித்து இடதுசாரி வேட்பாளர் லுலா டி சில்வா வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார். ஆனால் இந்த தேர்தல் முடிவுகளை போல்சனாரோவின் ஆதரவாளர்கள் ஏற்காமல் நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பிரேசிலியா நகரில் திரண்ட போல்சனாரோவின் ஆதரவாளர்கள், நாடாளுமன்ற கட்டடம், உச்சநீதிமன்றம் மற்றும் அதிபர் மாளிகையினுள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த ஜன்னல்கள் மற்றும் பொதுசொத்துக்களையும் சேதப்படுத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதனிடையே அதிபர் லுலா டி சில்வாவின் உத்தரவுப்படி கண்ணீர் புகை குண்டுகளை வீசி போல்சனாரோ ஆதரவாளர்களை காவல்துறையினர் விரட்டி அடித்தனர். அதே நேரம் இந்த வன்முறைகளை தான் தூண்டி விடவில்லை என்று போல்சனாரோ கூறியுள்ளார்.
இந்த போராட்டம் குறித்த தகவல் வெளிவந்ததும் போராட்டக்காரர்களை முச்சரிக்கையாக அப்புறப்படுத்த வேண்டும் என காவல்துறையினருக்கு அதிபர் லுலா டி சில்வா உத்தரவிட்டிருந்தார். ஆனால், பெரும்பாலான காவல்துறையினர் போராட்டகார்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போராட்டக்காரர்களுக்கு பாதுகாப்பு அளித்து 7 கி.மீ பேரணியை அனுமதித்து அரசுக் கட்டடங்களுக்குள் நுழையவும் போலிஸார் அனுமதித்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும், காவல்துறையினர் சிலர் போராட்டக்காரர்கலோசு புகைப்படம் எடுத்த வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக அதிபர் லுலா டி சில்வா தலைநகர் பிரேசிலியாவில் நிகழ்ந்த வன்முறையைத் தடுக்க காவல்துறையினர் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தவிற அதிபர் சில்வாவுக்கு ஆதரவாகவும் நாட்டின் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தப்பட்டது. இது போன்ற போராட்டங்களால் பிரேசிலில் பரபரப்பு நிலவுகிறது.
Also Read
-
வாக்களித்த மக்களுக்கு கைக்கொடுக்க இவ்வளவு தயக்கம் ஏன்? - முதலமைச்சரின் சர்ச்சை செயலுக்கு எழும் கண்டனம்!
-
அதிரடியாக ஜாகீர் கானை இறக்கிய சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் மைண்ட்.. இதுதான் ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
-
உயிரைக் காக்கும் மருந்தா? விளம்பரத்திற்கு பயன்படும் மோதிரமா? : த.வெ.க.வை நோக்கி எழும் கேள்விகள்!
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 : தங்கத்தை தட்டித் தூக்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
-
“எங்கப்பா காமராஜர் படம்?” : வெளிச்சத்திற்கு வந்த த.வெ.க அரசின் பித்தலாட்டம்!