உலகம்

அரசு நிகழ்ச்சியின் போது மேடையிலேயே சிறுநீர் கழித்த அதிபர்.. வீடியோ வெளியிட்ட செய்தியாளர்கள் கைது !

ஆப்ரிக்க கண்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நாடுதான் தெற்கு சூடான். 1956 ஆம் ஆண்டு முதல் சூடான் குடியரசின் ஒரு பகுதியாக இருந்த இந்த நாடு உள்நாட்டுப் போரை அடுத்து 1972 ஆம் ஆண்டு தன்னாட்சி பகுதியானது.

பின்னர், கட்னத 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 99% பேர் தனிநாடாக செல்ல ஆதரவு கொடுத்ததால் சூடான் குடியரசில் இருந்து பிரிந்து தனி நாடானது. இந்த நாட்டில் சுதந்திரம் அடைந்ததில் இருந்து அதிபராக சல்வா கீர் என்பவர் அதிபராக இருந்து வருகிறார்.

சுதந்திரம் அடைந்த பின்னரும் கூட அந்த நாடு கடும் உள்நாட்டு வன்முறையில் சிக்கி தவித்து வருகிறது. மேலும் அந்த நாட்டின் அதிபர் சல்வா கீரும் சர்வாதிகார அரசை நடத்து வருவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் அந்த நாட்டு மக்கள் பெரும் வருமையில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தெற்கு சூடானின் தலைநகரான ஜூபாவில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு அதிபர் சல்வா கீர் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியின் பாதியில் ஆடையிலேயே அந்நாட்டு அதிபர் சிறுநீர் கழித்துள்ளார். இந்த செய்தியை அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்தியாளர்கள் சிலர் வீடியோ எடுத்து அதனை செய்தியாக வெளியிட்டனர்.

இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆடையிலேயே சிறுநீர் கழித்த அதிபரின் வீடியோவை வெளியிட்ட செய்தியாளர்கள் 6 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். அந்த நாட்டு அரசின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: சினிமா நடிகர்கள் படங்களுடன் சபரிமலை செல்ல தடை -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !