உலகம்
அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகிறதா ரஷ்யா ? - புதினின் நண்பர் கருத்தால் பரபரப்பில் உலகநாடுகள் !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான 7 மாத போர் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த போர் குறித்து ரஷ்யா அதிபர் புதின் நண்பனும், இந்த போரின் மூளையாக செயல்படுபவருமான அலெக்சாண்டர் டுகின் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய அவர், " இந்த போர் நாங்கள் வெற்றி பெறும் தருணத்தில் முடிவுக்கு வரும். ஆனால் அது அத்தனை எளிது அல்ல என்பது தெரியும். இரண்டாவதாக இந்த சண்டையானது, உலகம் அழியும் போது முடியும். இந்த போரில் ஒன்று நாங்கள் வெல்வோம் அல்லது உலகம் அழிந்துவிடும்.
இந்த போரில் வெற்றியைத் தவிரஎந்த ஒரு தீர்வையும் நாங்கள் ஏற்கப்போவதில்லை.இதையே எங்கள் நாடும், எங்கள் மக்களும் எங்கள் அதிபரும் கருதுகிறார்கள்" என்று கூறியுள்ளார். இதன் மூலம் இந்த போரில் ரஷ்யா தோல்வியைத் தழுவினால் அந்த நாடு அணுஆயுதத்தை பயன்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!