உலகம்
மனித மூளைக்குள் சிப்.. எலான் மஸ்க்-ன் அடுத்த அதிரடி.. விலங்குகளுக்கு பொருத்தி சாதனை படைத்ததாக அறிவிப்பு !
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் சில வாரங்களுக்கு முன்னர் பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டரை வாங்கி அதன் உரிமையாளராக மாறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களில் பரபரப்பாக வலம்வந்த அவர், தற்போது மீண்டும் தலைப்பு செய்தியாக மாறியுள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் மூலம் மின்சார கார்கள் யுகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய அவர், பிற நிறுவனங்கள் பெட்ரோலிய வாகனங்கள் உருவாக்குவதில் மும்முரமாக இருந்த நிலையில், மின்சார வாகன உற்பத்தியை தொடங்கி இப்போது அந்த துறையில் பிற நிறுவனங்கள் தொடமுடியாத உச்சத்தில் இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து விண்வெளி திட்டங்கள் மேற்கொள்ளும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை தொடங்கிய அவர், தற்போது தனியார்கள் கோலோச்சும் அந்த துறையில் ஜாம்பவானாக வலம்வருகிறார். இது போன்ற பல முன்னணி நிறுவனங்களை நடத்திவரும் எலான் மஸ்க், மனித மூளையை ஆராய்ச்சி செய்யும் நியூராலிங் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
கடந்த சில வருடங்களாக விலங்குகளின் மூளைக்குள் சிப் பொருத்தி சோதனை நடத்திவந்த இந்த நிறுவனம் தற்போது அந்த சோதனையில் வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட எலான் மஸ்க், அதில் சிறிய நாணயம் வடிவில் இருக்கும் சிப்பை விலங்குகளுக்கு பொருத்துவதில் வெற்றிபெற்றதாகவும், அடுத்ததாக அந்த சிப்பை மனித மண்டை ஓட்டிற்குள் அடுத்த 6 மாதங்களில் பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இதற்கான சோதனை அறிக்கைகளை அமெரிக்கா உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் வழங்கி இருப்பதாகவும் அதன் அனுமதி கிடைத்தபின்னர் இது தொடர்பான சோதனை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த சோதனை அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!