உலகம்

“சாப்பாட்டுக்கு கூட வயிற்றில் இடமில்லை..” -உணவு குழாயை அடைத்த 3 கிலோ முடி: சிறுமிக்கு ஏற்பட்ட விநோத நோய்!

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரது பெற்றோர் வெளியூரில் வசித்து வருவதால், இவர் தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். அந்த பகுதி பள்ளியில் படிக்கும் இவர், அவ்வப்போது வயிறு வலிக்கிறது என்றும் கூறி வந்துள்ளார். மேலும் அவருக்கு எந்தவொரு மருந்து கொடுத்தாலும் கேட்கவும் இல்லை; அவரால் சரியாக சாப்பிடவும் இயலவில்லை.

இதனால் பயந்துபோன குடும்பத்தினர், இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கே அவருக்கு ஸ்கேன் செய்து சோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் சிறுமி வயிற்றில் அதிகப்படியான முடி சிக்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமிக்கு உடனே அருவி சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் வழங்கிய ஆலோசனை படி மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில் சிறுமி வயிற்றில் இருந்து சுமார் 3 கிலோ எடை முடி அகற்றப்பட்டது. மேலும் சில தேவையில்லாத கழிவுகளும் அகற்றப்பட்டது. இந்த விநோத நிகழ்வு குறித்து அந்த மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், "சிறுமிக்கு வயிற்று வலி என்று இங்கு வந்தார். ஆனால் அவரை பரிசோதனை செய்ததில் அவரது வயிற்றில் முடி இருந்தது கண்டுபிடிக்கப்ட்டது.

மேலும் அந்த முடிகள் அனைத்தும் குடல்களுக்குள் இருந்து உணவு குழாயை அடைத்துள்ளது. சிறுமியிடம் விசாரித்ததில், அவருக்கு பேப்பர், களிமண், அழுக்கு உள்ளிட்டவைகளை சாப்பிடும் Pica என்ற disorder இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்து 3 கிலோ எடையுள்ள முடிகள் அகற்றப்பட்டது. தற்போது சிறுமி நலமாக உள்ளார்" என்றார்.

இது போன்ற disorder உள்ளவர்கள் Rapunzel syndrome என்ற trichophagia என்று சொல்லப்படும் மனநல பிரச்னை உள்ளவர்களாக கருதப்படுவர். இவர்கள் முடி, அழுக்கு உள்ளிட்ட உண்ணகூடாதவைகளை உண்ணுவர். இதன் விளைவு இவர்களது உயிர் போககூடிய அளவிற்கு இருக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் வயிற்றிலிருந்து 62 ஸ்பூன்களை மருத்துவர்கள் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக வெளியே எடுத்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தை சேர்ந்த 58 வயது நபரின் வயிற்றில் இருந்து ஒன்றரை கிலோ எடைகொண்ட 187 நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “உன்ன நம்பினதுக்கு..” - Google Map பார்த்தவாறு கார் ஓட்டி, கழிவுநீர் வாய்க்காலில் இறக்கிய சென்னை நபர் !