உலகம்
காதலனை சந்திக்க 5000 கி.மீ பயணம் செய்த பெண் கொடூர கொலை.. கடற்கரையில் கிடந்த உடல்: பகீர் சம்பவம்!
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் பிளாங்கா ஒலிவியா ஆர்ல்லேனோ கட்டிரெஸ். இவருக்கு ஆன்லைன் வழியாக ஜூவான் பேப்லோ ஜீசஸ் வில்லாபுர்தே என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். பிறகு இவர்கள் இருவரும் ஆன்லைனில் பேசி நட்பாக பழகி வந்துள்ளனர்.
பின்னர் நாளடைவில், இது காதலாக மாலர்ந்துள்ளது. இதையடுத்து தனது காதலரை நேரில் சந்திக்க பிளாங்கா ஒலிவியா முடிவெடுத்துள்ளார். அதன்படி கடந்த ஜூலை மாதம் 5000 கிலோ மீட்டர் பயணம் செய்து பெரு நாட்டிற்குச் சென்றுள்ளார்.
இதையைடுத்து பிளாங்கா ஒலிவியாவின் சகோதரி மகள் கார்லா அரோலோனா அவருக்கு நவம்பர் 7ம் தேதி அழைத்துப் பேசியபோது காதலனுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறியுள்ளார். பிறகு 2 வாரங்கள் கழித்தும் தனது அந்தையிடம் இருந்து எந்த தகவலும் அவருக்கு வரவில்லை.
பின்னர், பெரு நாட்டில் தனது அத்தை நவம்பர் 7ம் தேதியிலிருந்து காணவில்லை என கார்லா அரோலோனா ட்விட் செய்துள்ளார். இதைபார்த்த பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்துள்ளனர். மேலும் அத்தையின் காதலனும் அவர் அவர் ஊருக்குத் திரும்பி விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காணமால் போன பிளாங்காவின் உடல் ஹீவாக்சோ கடற்கரையில் மீன் பிடித்த மீனவர்கள் வலையிலிருந்து போலிஸார் மீட்டுள்ளனர். மேலும் அவரது உடலில் சில உறுப்புகள் காணாமல் போனதையும் போலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் பிளாங்கா ஒலிவியா காதலித்தது மனித உறுப்புகளைத் திருடும் நபர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் காதலியைக் கொலை செய்து உறுப்புகளை காதலனே திருடியுள்ளார் என்பது விசாரணையில் தெரிந்ததை அடுத்து போலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!