உலகம்
கொழுந்துவிட்டு எரிந்த தொழிற்சாலை.. 36 தொழிலாளர்கள் உடல் கருகி பலி: சீனாவில் நடந்த கோர விபத்து!
சீனாவின் மத்திய பகுதியில் உள்ளது ஹெனான் மாகாணம். இங்குப் பலதொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் வேலைபார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ தொழிற்சாலை முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகே தீயை அணைத்துள்ளனர்.
மேலும் இந்த தீ விபத்தில் 36 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்திற்குச் சிலரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆலையில் ஆபத்தான பொருட்களை வைத்திருந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு ஷியானில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் யான்செங்கில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 78 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
5 கி.மீ தூரம் நடைபயணம் : தமிழ் வெல்லும்' - கலைஞர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !