உலகம்
எலான் மஸ்க்-ன் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்.. கொத்துக்கொத்தாக ராஜினாமா செய்யும் Twitter ஊழியர்கள் !
உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.அதைத் தொடர்ந்து பணியில் இருக்கும் ட்விட்டர் ஊழியர்களுக்கு எலான் மஸ்க் மிரட்டல் விடுக்கும் விதமாக பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ட்விட்டர் ஊழியர்களை நேரடியாக சந்தித்த எலான் மஸ்க், வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றும், கொரோனா பெருந்தொற்று காலம் முடிவடைந்ததால் இனி எந்த ஊழியருக்கும் வீட்டிலிருந்து பணி புரியவேண்டாம் என்றும் கூறியுள்ளார். அதோடு இதெற்கெல்லாம் ஒப்புக் கொண்டால் மட்டும் வேலைக்கு வரலாம் என்றும், இல்லாவிட்டால் வீட்டிலேயே இருந்துகொள்ளலாம், உங்கள் ராஜினாமாக்களை நாங்கள் தாராளமாக ஏற்றுக் கொள்வோம் என்றும் கூறியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், அதிக நேரம் பணிபுரியவேண்டும் என்ற எலான் மஸ்க்ன் கோரிக்கைக்கு ட்விட்டர் ஊழியர்கள் பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், வியாழன் மாலைக்குள் ஒப்புதல் இமெயிலை ஊழியர்கள் அனுப்பலாம் விருப்பமில்லாதவர்கள் விலகிக் கொள்ளலாம் என்று எலான் மஸ்க் கெடு விதித்திருந்த நிலையில், பல்வேறு ஊழியர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!